தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தனியார் பாதுகாப்பு பணி

தனியார் பாதுகாப்பு பணி

தனியார் பாதுகாப்பு பணி


மார் 08, 2010 12:00 AM

மார் 08, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 08, 2010 12:00 AM மார் 08, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகள் செயல்படாத இடங்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்து நாடுகளிலும் காலூன்றி போலீஸ் துறையினருக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சியை பெற்றுள்ளன.

சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிப்பது, தேவைப்படும் தகவல்களை சேகரிப்பது, சாட்சிகளை உருவாக்குவது, ஆவணங்களை தேடி கண்டுபிடிப்பது, பிரபலங்கள் மற்றும் தனிநபர்களின் பின்னணிகளை அம்பலப்படுத்துவது என்று பல்வேறு கோணங்களில் பணிகளை மேற்கொள்ளும் துறையாக புலனாய்வு பரிமளிக்கிறது.

புலனாய்வு என்பது சாதாரணமான பணியல்ல. இதற்கென்று பிரத்யேக திறமைகள், சாதுரியமாக செயல்படும் திறன், பிரச்னைகளை சமாளிக்கும் புத்திகூர்மை, உடல் வலு போன்றவற்றை பெற்றிருப்பவர்கள் மட்டுமே இதில் சாதிக்கமுடியும். மற்ற துறைகளை விட இதில் ஆபத்து அதிகம் என்பதால் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் மட்டுமே இத்துறையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிரபலமான தனியார் புலனாய்வு துறைகளில் தேவைகளுக்கேற்ப பணிகள் பிரித்துக் கொடுக்கப்படும். எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைப்பவர்கள் போலீஸ் துறையினரின் மூலம் தங்களுக்கென்று நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள முடியாது.

அதற்காக பிரத்யேகமாக பலரின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். ஆனால் தனியார் பாதுகாப்பு துறையினரை அவர் நாடினால் அவர் இயல்பான நிலையை அடையும் வரை அவருக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பர். இன்றைய சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்பவர்கள் கூட தங்கள் வாழ்க்கை துணைவர் அல்லது துணைவியை பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்கு புலனாய்வு துறைகளை நாடிச்செல்வது அதிகரித்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராக்களை பயன்படுத்துவது, பேச்சுக்களை பதிவு செய்வது என்று பல்வேறு கருவிகள் பயன்படுத்தப் பட்டாலும், பாதுகாப்பு மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கு மனித திறனை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய நிலை உள்ளது.

எனவே புலனாய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதற்கென்று பயிற்சியளிப்பதற்காக உள்ள நிறுவனங்களின் பெயர் விபரம் வருமாறு:
1. டாப்ஸ் டிடெக்டிவ் அன்ட் செக்யூரிட்டி சர்வீஸ் லிமிடெட், சிக்னிவாலா சேம்பர்ஸ், ஆப்போசிஸ்ட் கோம்டிபூர் கேட், ஆமதாபாத்-380 021.
2. புரபொசனல் செக்யூரிட்டி சர்வீசஸ், 2948, ஈஸ்ட் சோர்ட் ரோடு, ஆப்போசிஸ்ட் மாரூத் விஜயாநகர், பெங்களூரு- 560 040.
3. குளோப் டிடெக்டிட் ஏஜென்சி(பி) லிமிட், 11, சார்ட் ஸ்டிரீட், கோல்கத்தா-700 016.
4. இன்டர்நேசனல் இன்ஸ்டியூட் ஆப் செக்யூரிட்டி அன்ட் சேப்டி மேனேஜ்மென்ட், 85-ஏ, ஹூமாயூன்பூர், பி-5 பிளாக், சப்துர்ஜங் என்கிளேவ்,  நியூ டில்லி-110 029.
5. நேசனல் செக்யூரிட்டி அன்ட் அலைடு சர்வீசஸ், 1492, வாசீர் நகர், ஆப்போசிஸ்ட் பி.டி. காலேஜ், டிபன்ஸ் காலனி, நியூ டில்லி-110 003.
6. புரோப் டிடெக்டிவ் ஏஜென்சி, 24/1, தம்பியாக் ரோடு எக்ஸ்டென்சன், வெஸ்ட் மாம்பலம், சென்னை-600 001.
7. டிஆர்ஐஜி கார்டுபோர்ஸ் லிமிடெட், டிஆர்ஐஜி ஹவுஸ், 10 வது ரோடு, ஜேவிபிடி ஸ்கீம். ஜூஹூ, மும்பை-400 0049.
8. டாப்ஸ்குரூப் கார்பரேட் ஆபீஸ், 96 ஆரெம் நகர்-1,7 பங்களாஸ், அந்தேரி டபிள்யூ, மும்பை-400 061.

சுய வேலைவாய்ப்பினை அளிக்கும் துறைகளில் ஒன்றாக கருதப்படும் தனியார் புலனாய்வு துறைகள் தங்கள் பணிகளை தனித்தனியாக பிரித்து அதற்கு தகுந்த நபர்களிடம் ஒப்படைத்து தேவையான தகவல்களை திரட்டிக்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. தனிதிறன் அதிக அளவில் தேவைப்படுவதால் இத்துறையில் முன்னாள் போலீஸ் துறையை சார்ந்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வாய்ப்புகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன.

அதேப்போன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரும் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் தேவையான இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை வழங்கி தங்களுக்கென்று தனி புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத துறைகளில் ஒன்றாக பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை கருதப்படுவதால் இதில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் சாதனைகளுக்கேற்ப புகழும், சமூக அந்தஸ்தும் கிடைத்து வருகின்றன. எனவே புலனாய்வில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் உடல்திறனில் வலுவுள்ளவர்கள் இத்துறைக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us