மார் 09, 2010 12:00 AM
மார் 09, 2010 12:00 AM
குறிப்பிட்ட பண்புகளை கொண்ட தனிமங்களுக்கு உலோகம் என்று பெயர். இவை மின்கடத்தல் மற்றும் வெப்பக்கடத்தல் திறன் பெற்றவை. உலோகவியல் இன்ஜினியரிங் (Metallurgical Engineering) படிப்பானது உலோகங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், உள் கூட்டுப்பொருட்கள் மற்றும் கலப்பு உலோகங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து படிப்பதாகும்.
இத்துறையை ‘டெக்னாலஜி ஆப் மெட்டல்ஸ்’ என்றும் அழைப்பார்கள். உலோகங்களை தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்தல், பயன்படுத்தல், ஆராய்தலை இத்துறை உள்ளடக்கியது. உலோகவியல் துறையானது சில பிரிவுகளை உள்ளடக்கியது.
தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்தல்: பூமியிலிருந்து எடுக்கப்பட்ட தூய்மையற்ற, கலப்படமான கனிமங்களின் மீது ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றின் தன்மைகளை ஆராய்தல் மற்றும் உலோகத் தாதுப் பொருட்களிலிருந்து உலோகங்களை தனியாக பிரித்தெடுக்கும் பயிற்சி போன்றவற்றை இப்பிரிவு உள்ளடக்கியது. இயற்பியல் கோட்பாடுகள், வேதியியல் கோட்பாடுகள், எலக்ட்ரோலைட்டுகள் மூலமாக சுத்தமான உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.கலப்பு உலோகங்கள்
அலுமினியம், குரோமியம், காப்பர், இரும்பு, மெக்னீசியம், நிக்கல் போன்ற சில தனிமங்கள் பொதுவாக கலப்பு உலோகங்களாக பயன்படுத்தப் படுகின்றன.
உலோகங்கள் உற்பத்தி
உற்பத்தி இன்ஜினியரிங் உதவியுடன், நுகர்வோர் மற்றும் தொழிற்சாலை இன்ஜினியர்களுக்கு தேவைப்படும் கலப்பு உலோகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உருவம், அளவு, வெப்பத்தன்மை, திடத்தன்மை, துருப்பிடித்தல், சிதைவுறுதல் உள்ளிட்ட பல சோதனைகளுக்கு பின் உலோகங்கள் உற்பத்தியாகும்.
ஒவ்வொரு உலோகவியல் இன்ஜினியரும், அடிப்படை இன்ஜினியரிங் மட்டுமல்லாமல் மேற்கூறிய பிரிவுகளின் அடிப்படைத் தத்துவங்
களையும் பயில்கின்றனர். உலோகவியல் இன்ஜினியர்களின் வேலைகள் உலோகவியல் விஞ்ஞானிகளை ஒத்து காணப்படுகின்றன. உலோகவியல் இன்ஜினியர்கள் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், எக்ஸ்-ரே கருவிகள், நிறமாலையை புகைப்படமெடுக்கும் ‘ஸ்பெக்ட்ரோ கிராப்’, போன்ற லேட்டஸ்ட் கருவிகளை பயன்படுத்துகின்றனர்.
பயிலும் கல்வி நிறுவனங்கள்
1. ஐ.ஐ.டி., , சென்னை ( http://www.iitm.ac.in/ )
2.என்.ஐ.டி., திருச்சி ( http://www.nitt.edu/home/ )
3. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ( http://www.annauniv.edu/index.php )
4. பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி, கோவை ( http://www.psgtech.edu/ )
5. அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் ( http://www.gcesalem.edu.in/index.htm )
6. ஐ.ஐ.டி., மும்பை ( http://www.iitb.ac.in/ )
7. ஐ.ஐ.டி., கான்பூர் ( www.iitk.ac.in )
8. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி ( www.bhu.ac.in )
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்,பெங்களூரு ( www.iisc.ernet.in )
வேலை வாய்ப்புகள்
உலோகவியல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. வருகிற 2020 ஆம் ஆண்டிற்குள் 2.20 லட்சம் உலோகவியல் வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர் என இந்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தவிர, உலோகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மேற்கொள்ளும், அசோக் லேலண்ட், ஜி.பி.,இன்டஸ்ட்ரீஸ், லார்சன் மற்றும் டர்போ
லிமிடெட், மகேந்திரா, டாடா ஸ்டீல்ஸ், டி.வி.எஸ்.,, உள்ளிட்ட அனைத்து தனியார் தொழிற்சாலைகளிலும் பணிபுரியலாம்.
ஆரம்ப காலத்திலேயே ரூ. 40,000 ஊதியம் பெறலாம். போதிய அனுபவம் பெற்ற பின் ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு உள்ள அற்புதமான துறையாகும்.
