ஐ.ஐ.ஐ.டி., - அலகாபாத் (சிறந்த கல்வி நிறுவனங்கள்-90)
ஐ.ஐ.ஐ.டி., - அலகாபாத் (சிறந்த கல்வி நிறுவனங்கள்-90)
மார் 18, 2010 12:00 AM
மார் 18, 2010 12:00 AM
நாட்டில் உயர்கல்வி வழங்குவதில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ‘ஐ.ஐ.ஐ.டி.,- அலகாபாத் ’ திகழ்கிறது. இது மத்திய அரசால் 1999 ஆண்டு துவங்கப்பட்டது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பிரிவுகளில் உள்ள படிப்புகளை வழங்குவதிலும், ஆய்வுகளை மேற்கொள்வதிலும் இந்நிறுவனம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. இந்திய ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு இக்கல்லூரி பெரிதும் துணை நிற்கிறது. இது 2000ம் ஆண்டில் நிகர்நிலை பல்கலைக்கழமாக அங்கீகரிக்கப்பட்டது. சிறந்த இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான நாஸ்காம் ரேங்கிங்கில் 11வது இடம் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் இது அமைந்துள்ளது. இன்டர்நெட் வசதி கொண்ட நவீன கம்ப்யூட்டர் ஆய்வகம், வீடியோ கான்பரன்சிங், டிஜிட்டல் நூலகம், அனுபவம் வாய்ந்த பேராசியர்கள், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் போன்ற வசதிகள் உள்ளன. இந்நிறுவனம் வழங்கும் படிப்புகளில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் புதிய தொழில்நுட்ப பாடங்களை மாணவர்களுக்கு வழங்குவதோடு மட்டுமின்றி தொழில் அனுபவத்தையும் வழங்குகிறது.
ஐ.ஐ.ஐ.டி.,யில் உள்ள படிப்புகள் இளநிலை படிப்புகள்
* பி.டெக்., ( எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
* பி.டெக்., (தகவல் தொழில்நுட்பம்)
இரண்டு படிப்புகளுக்கும் தலா 163 இடங்கள் உள்ளன. மாணவர்கள் இப்படிப்பில் சேர்வதற்கு ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
முதுகலை படிப்புகள்
* எம்.டெக்., (தகவல் தொழில்நுட்பம்)
* எம்.டெக்., (வயர்லெஸ் கம்யூனிகேசன் மற்றும் கம்ப்யூட்டிங்)
* எம்.டெக்., (பயோ இன்பர்மேட்டிக்ஸ்)
* எம்.டெக்., (சாப்ட்வேர் இன்ஜினியரிங்)
* எம்.டெக்., (ரோபோடிக்ஸ்)
* எம்.டெக்., (மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ்)
* எம்.டெக்., (இன்டலிஜன்ட் சிஸ்டம்)
* எம்.டெக்., (ஹியூமன் கம்ப்யூட்டர் இன்ட்ராக்சன்)
மாணவர்கள் முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு பி.இ., படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் ‘கேட்’டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் அவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
* எம்.பி.ஏ., (தகவல் தொழில்நுட்பம்)
இது இரண்டு வருட படிப்பாகும்.
* எம்.எஸ்., சைபர் சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு
இது சைபர் குற்றங்களை தடுப்பது பற்றிய இரண்டு வருட படிப்பாகும்.
* பிஎச்.டி., படிப்புகள்
நெட்வொர்க்கிங், இமேஜ் பிராசஸிசிங், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேசன், பயோ சிஸ்டம் போன்ற துறைகளில் பிஎச்.டி., படிப்புகளும் இந்நிறுவனத்தில் உள்ளன.
வேலைவாய்ப்புகள்
ஐ.ஐ.ஐ.டி.,- அலகாபாத் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வளாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் படித்து முடிக்கும் போதே வேலைவாய்ப்பையும் பெறுகின்றனர். கடந்த ஆண்டு அதிகமான வேலைவாய்ப்பினை வழங்கிய கல்லூரிகளுக்கான நாஸ்காம் ரேங்கிங்கில் இந்நிறுவனம் 4வது இடம் பெற்றது.
மேலும் விபரங்களுக்கு www.iiita.ac.in என்ற வெப்சைட்டை பார்க்கவும்.
