தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்தியாவில் அதிகரிக்கும் பணிவாய்ப்புகள்

இந்தியாவில் அதிகரிக்கும் பணிவாய்ப்புகள்

இந்தியாவில் அதிகரிக்கும் பணிவாய்ப்புகள்


ஏப் 27, 2010 12:00 AM

ஏப் 27, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 27, 2010 12:00 AM ஏப் 27, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலை வாய்ப்பு குறித்த இணையதளங்களில் நவுக்ரி டாட் காம் என்ற இணையதளம் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்போ எட்ஜ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த இணைய தளத்தின் சார்பாக மாதம் தோறும் ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்த பணிவாய்ப்பாளர்களின் தகவலுடன் இணையதளத்தின் டெலிகாலிங் குழுவின் தகவல்களும் இந்தக் கள ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தக்கள ஆய்வின் முக்கிய முடிவுகள் இங்கே தரப்படுகின்றன.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் வேலை எடுப்பு விகிதம் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐ.டி.இ.எஸ்., இன்சூரன்ஸ், ஆட்டோமொபைல் ஆகிய துறைகளின் கடும் வேலை சேர்க்கும் முயற்சிகளால் இந்த விகிதம் அதிகரித்துள்ளது. புதிதாகப் பணி நியமனங்களைச் செய்வதில் நிறுவனங்கள் நேர்முகச் சிந்தனையைக் கையாளத் துவங்கியுள்ளன. இதனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டு மிகவும் பிரகாசமாக மலர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும் போது, ஐ.டி.இ.எஸ்., மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் முறையே 13 மற்றும் 15 சத விகித அளவு புதிய பணி நியமன விகிதம் அதிகரித்துள்ளது. எல்லாத் துறைகளிலும் தீவிரமாகப் புதிய பணி நியமன முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்தியாவில் தற்போது பணியெடுப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் இந்த நிலை நிலவுவதாகவும்
இந்த இணையதளத்தின் கள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நகரங்களைப் பொறுத்த ஒப்பீட்டில், கடந்த பிப்ரவரியைவிட மிக அதிக பட்சமாகப் புது டில்லியில் 13 சதவிகித அளவு புதிய பணி நியமன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us