தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஆமதாபாத்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஆமதாபாத்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், ஆமதாபாத்


மே 07, 2010 12:00 AM

மே 07, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 07, 2010 12:00 AM மே 07, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடிவமைப்புக்கான உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக இந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் (என்.ஐ.டி.,) விளங்குகிறது. இந்த நிறுவனம் ஆமதாபாத், காந்திநகர் (குஜராத்) மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் இயங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. வடிவமைப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் இங்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு வடிவமைப்பு துறையில் உலகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த வடிவமைப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்தோடு, மாணவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனத்தின், பெங்களூரு கிளை 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அரசால் துவங்கப்பட்டது. இதற்கு வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுமதி அளித்தது. இங்கு முதலில் 200708ம் ஆண்டு இரண்டு முதுகலை படிப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. பின்னர் 200809ம் ஆண்டு முதல், ஆராய்ச்சி படிப்புகளும் இங்கு துவக்கப்பட்டன. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் ஆராய்ச்சி படிப்புக்கு வழிகாட்டி உதவுகின்றனர். இதனால் மாணவர்கள் சிறப்பாக செயல்பட முடிகிறது. மேலும் இந்த கல்வி நிறுவனம் உலக அளவில் பல வடிவமைப்பாளர்களை உருவாக்கிய பெருமையுடையது.
பாடப்பிரிவுகள்: இக்கல்வி நிறுவனத்தில் நான்கு வருட பட்ட படிப்பும், இரண்டு முதல் இரண்டரை வருட பட்டமேல்படிப்பும் உள்ளது. இதில் பல பிரிவுகள் காணப்படுகின்றன. இங்கு பட்டபடிப்பில் 100 மாணவர்களும் பட்டமேல் படிப்பில் 240 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர்.
நான்கு வருட பட்டபடிப்பான கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன் (ஜி.டி.பி.டி.,)னில் உள்ள பிரிவுகள்

* புராடக்ட் டிசைன்
* பர்னிச்சர் அண்டு இன்டீரியர் டிசைன்
* செராமிக் அண்டு கிளாஸ் டிசைன்
* கிராபிக் டிசைன்
* அனிமேஷன் பிலிம் டிசைன்
* பிலிம் அண்டு வீடியோ கம்யூனிகேசன்
* எக்ஸிபிசன்(ஸ்பாடியல்) டிசைன்
* டெக்ஸ்டைல் டிசைன்
* டிரான்ஸ்போர்ட்டேசன் அண்டு ஆட்டோமொபைல் டிசைன்
இரண்டு முதல் இரண்டரை வருட பட்டமேற் படிப்பான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ புரோகிராம் இன் டிசைன்(பி.ஜி.டி.பி.டி.,)னில் ஐந்து ஆசிரியர்களின் கீழ் 17 பிரிவுகள் இயங்கி வருகின்றது.

காந்திநகர் கிளை வளாகத்தில் உள்ள பாடப்பிரிவுகள்:
* டாய் அண்டு கேம் டிசைன்
* அப்பேரல் டிசைன் அண்டு மெர்ச்சன்டைசிங்
* லைப் ஸ்டைல் அக்ஸசரி டிசைன்
* நியூ மீடியா டிசைன்
* ஸ்டிராடஜிக் டிசைன் மேனேஜ்மென்ட்

பெங்களூரு கிளை வளாகத்தில் உள்ளபாடப்பிரிவுகள்:
* இன்பர்மேஷன் அன்டு இன்டர்பேஸ் டிசைன் (2 வருடம்)
* டிசைன் பார் ரீடெயில் எக்ஸ்பீரியன்ஸ் (2 வருடம்)
* டிசைன் பார் டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் (2 வருடம்)
* டிசைன் பார் டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் (பி.ஜி.டி.பி.டி.,)
இக்கல்வி நிறுவனத்தில் சேர எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மேற்கூறிய படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
  வேலைவாய்ப்புகள்:
டிசைனிங் படிப்பு முடித்தவர்களுக்கு தனியார் வடிவமைப்பு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தனியாக வடிவமைப்பு நிறுவனமும் தொடங்க முடியும். மேலும் இந்த படிப்பு முடித்தவர்களுக்கு வடிவமைப்பு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிவாய்ப்புகளும் காணப்படுகின்றன. வடிவமைப்பாளர்களுக்கு மீடியா மற்றும் கம்யூனிகேசன் துறைகளிலும் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் விபரங்களை தீதீதீ.ணடிஞீ.ஞுஞீத என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us