தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி

இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி

இந்தியக் கடற்படையில் எஸ்.எஸ்.சி., அதிகாரிப் பயிற்சி


மே 08, 2010 12:00 AM

மே 08, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 08, 2010 12:00 AM மே 08, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியக் கடற் படையில் கல்விப் பிரிவில் குறுகிய கால அடிப்படையில் அதிகாரியாகப் பணிபுரியத் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கான பயிற்சி கேரளாவில் எழிமலாவில் உள்ள இந்திய நேவல் அகாடமியில் ஜனவரி 2011ல் துவங்கவுள்ளது.

வயது வரம்பு:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வயது 21 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.01.1986 முதல் 01.01.1990 க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:
முது நிலைப் பட்டப்படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், வரலாறு என்ற ஏதாவது ஒரு துறையில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் வேதியியல் புலத்தைச் சேர்ந்தவர்கள் பி.எஸ்சி., அளவிலான படிப்பில் கட்டாயம் கணிதம் மற்றும் இயற்பியலைக் ஒரு பாடமாகக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

உடற் தகுதி:
ஆண் விண்ணப்பதாரர்கள் உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீட்டரும், பெண் விண்ணப்பதாரர்கள் உயரம் குறைந்தபட்சம் 152 செ.மீட்டரும்
பெற்றிருப்பதுடன் இதற்கு இணையான எடையும் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற போதும் சில நிபந்தனைகள் உள்ளன. மாலைக்கண் மற்றும் நிறக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்ச்சி முறை:
இந்தப் பணிகளில் சேர கல்வித் தகுதியே முக்கியப் பங்காற்றுகிறது. சிறந்த கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்
படும். இந்த நேர்காணல் தேர்வுகள் இந்த ஆண்டு நவம்பருக்குள் பெங்களூரு, போபால், கோயம்புத்தூர் ஆகிய மையங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களைப் பொறுத்த மட்டில் எது அதிகபட்சத் தகுதியோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்காலம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கேரளாவில் உள்ள எழிமலாவில் சப்லெப்டினன்ட் பணி நிலையில் பயிற்சியில் இணைய வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 2011ல் துவங்கும். இந்தப் பயிற்சியில் நேவல் ஓரியன்டேஷன் பிரிவிலான படிப்பு இருக்கும். 2 ஆண்டுகால புரொபேஷன் பணிக்குப் பின் முழுமையாகப் பணியாற்ற வேண்டும். இந்த கால கட்டத்தில் திருமணம் செய்பவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டு விடுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பரிந்துரைக்கப் பட்ட மாதிரிப் படிவத்தினைப் பூர்த்தி செய்து பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும்
கவரின் மேல் தவறாமல் EDUCATION BRANCH & JAN 2011 COURSE,Educational Qualification M.Sc (Physics/Maths) (as applicable) Aggregate Percentage என்று குறிப்பிட்டு 21.05.2010க்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி:
POST BAG NO: 04,
CHANAKYAPURI PO,
NEW DELHI 110021.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us