தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ரியல் எஸ்டேட் படிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ரியல் எஸ்டேட் படிப்பு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ரியல் எஸ்டேட் படிப்பு


மே 11, 2010 12:00 AM

மே 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 11, 2010 12:00 AM மே 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணாமலை பல்கலைக்கழகம் முதன்முறையாக ரியல் எஸ்டேட் சார்ந்த முதுநிலை (எம்.எஸ்.சி., ) படிப்பை 20102011 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் அறிமுகம் செய்துள்ளது. ரியல் எஸ்டேட் மதிப்பீடு (Valuation of Real Estate) என்ற இந்த படிப்பை, ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிபவர்கள், பயிற்சியில் உள்ளவர்கள் ஆகியோரின் வசதிக்காக தொலை தூரக் கல்வியாக இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிப்பை வெற்றிகரமாக முடித்து, மதிப்பீட்டுத் துறையில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்ற பின், சொத்துவரி சட்டம் 34ஏபியின் கீழ் அசையா சொத்துக்களை மதீப்பிடு செய்யும் மதிப்பீட்டாளராக
(கேட்டகிரி-1) பதிவு செய்யலாம். வங்கிகள், நிதி நிறுவனங்களின் ரியல் எஸ்டேட் தொடர்பான மதிப்பீட்டாளராக பணியில் அமரலாம்.

தகுதிகள்:
ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பெற:
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்து கிளைகளிலும் இந்த படிப்பிற்கான விண்ணப் பத்தை பெறலாம். வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி இப்படிப்பிற்கான வகுப்புகள் துவங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us