தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை: சாதகமா?

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை: சாதகமா?

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலை: சாதகமா?


மே 12, 2010 12:00 AM

மே 12, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 12, 2010 12:00 AM மே 12, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியளித்தது வணிக நோக்கமாகவே கருதப்படுகிறது. எல்லா கல்வி நிறுவனங்களும், தங்களது கிளை நிறுவனத்தை வெளிநாடுகளில் துவக்க ஆர்வம் காட்டப் போவதில்லை. கடந்த காலங்களில், ஒரு சில ஆஸ்திரேலிய, பிரிட்டன் பல்கலைகழகங்கள் மட்டுமே சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் தங்களது கிளைகளை துவக்கியுள்ளன.

வெளிநாடுகளில் இருக்கும் சிறந்த பல்கலைக்கழகங்கள், வியாபாரம் கருதி, மற்ற நாடுகளில் கிளையை துவக்குவது சிறந்த நோக்கமாக இருக்காது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் ஐ.ஐ.டி., பிட்ஸ் பிலானி போன்ற முன்னணி நிறுவனங்களில் சேரத்தான் விரும்புவார்கள். அதனால் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் வெளிநாட்டு கிளை நிறுவனங்களுக்கு வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும்.

மேலும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் கல்விக்கட்டணமும் மிக அதிகம். இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காதவர்களே, இந்த நிறுவனங்களுக்கு செல்வார்கள். அவர்களுக்கு இடம் அளிப்பதும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிக்கலாகத்தான் இருக்கும். மேலும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும், உள்நாட்டில் ஆரம்பிக்கப்படும் அதே நிறுவனத்தில் பயில்வதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

மாணவர்கள் தங்கள் நாட்டிலேயே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதால், தங்கும் செலவு குறையும் என்பது தவறான கருத்து. பயிலும் கல்வி நிறுவனம் சொந்த ஊரில் இல்லாமல், வேறு நகரத்தில் இருக்குமானால், மாணவர்களுக்கு தங்கும் செலவு ஏற்படத்தான்
செய்யும். வெளிநாட்டில் தங்குவதை விட ஓரளவே செலவு குறையும் என்பதே உண்மை. இது போன்ற காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை இந்த பல்கலைக்கழகங்களில் குறைவாகவே இருக்கும்.

இங்கே நிறுவப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் சவாலான விஷயமாக உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் அங்கு சென்றுவிடுவதால் உள்ளூர் கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து ஆசிரியர்களை நியமிக்கும் போது, மாணவர்களின் கல்விக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டையாவது, கல்வி அமைச்சகம் அறிவித்தால்தான் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. மேலும் மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவன விபரங்களை அறிய, தொடர்பு கொள்ள: Association of Accredited Advisors on Overseas Education,Chennai. Ph: 044 2833 0600.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us