தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்கள்

ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்கள்

ஆசியாவில் சிறந்த பல்கலைக்கழகங்கள்


ஜூன் 15, 2010 12:00 AM

ஜூன் 15, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 15, 2010 12:00 AM ஜூன் 15, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக அளவில் மற்றும் ஆசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை 2004 முதல் ஆண்டுதோறும் www.topuniversities.com என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது. கல்வி ஆராய்ச்சியாளர்களின் குழுவை கொண்டு இந்த "ரேங்கிங்' வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலை இந்த இணையதளம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியிட்டது. சென்ற ஆண்டு முதலிடம் பிடித்த ஹாங்காங் பல்கலைக்கழகம் இந்த ஆண்டும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இரண்டாம் இடத்தை ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், மூன்றாம் இடத்தை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழமும் பிடித்தன.

கடந்த ஆண்டு பட்டியலில் ஹாங்காங் மற்றும் ஜப்பான் பல்கலைக்கழகங்களே முதல் ஐந்து இடங்களை பிடித்தன. இந்த ஆண்டு மூன்றாவது இடத்தை மட்டும் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் பெற்றது. முதல் இருபது பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிறுவனம் கூட இடம் பெறவில்லை. குறைந்தபட்சமாக ஐ.ஐ.டி., மும்பை 36வது இடத்தை பிடித்தது.

சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய இந்த இணையதளம் நான்கு முக்கிய வழிமுறைகளை கையாள்கிறது. கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சித் தரம், ஆசிரியர்களின் தரம், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் உலகளாவிய மதிப்பு ஆகிய நான்கு காரணிகள் முக்கியமாக பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு மற்றும் நவீன காலத்துக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் உள்ளனவா என்றும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முதல் பத்து இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்கள்:
1. ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங்
2. ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
பல்கலைக்கழகம், ஹாங்காங்
3. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
4. ஹாங்காங் சைனிஷ் பல்கலைக்கழகம், ஹாங்காங்
5. டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
6. சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென்கொரியா
7. ஒசாகா பல்கலைக்கழகம், ஜப்பான்
8. கியோடோ பல்கலைக்கழகம், ஜப்பான்
9. தொகோகு பல்கலைக்கழகம், ஜப்பான்
10. நகோயா பல்கலைக்கழகம், ஜப்பான்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us