ஜூலை 12, 2010 12:00 AM
ஜூலை 12, 2010 12:00 AM
ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு இரண்டுக்கும் இடையே பாலமாக செயல்படும் துறை அப்பேரல் மேனேஜ்மென்ட் . இத்துறை வல்லுனர்களை மெர்கன்டைசர், அப்பேரல் மேனேஜர் என அழைக்கப்படுவார்கள்.
மேலும் வியாபார யுக்திக்கு தேவையான புத்திகூர்மை, வடிவமைப்பில் தொழில்நுட்ப ரீதியாக புதுமைகளை புகுத்துவதற்கான சிறந்த கற்பனை வளம் போன்றவை, ஒரு அப்பாரல் மேனேஜர்/மெர்கன்டைசருக்கு தேவையான திறன்களாக கருதப்படுகின்றன. இந்த துறைக்கு சிறப்பாக நிர்வாகம் செய்பவர்கள், தொழிட்நுட்ப அறிவு படைத்தவர்கள் என பல்வேறு வகையான நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்தியாவில் மட்டும் 5 மில்லியன் நபர்கள் தேவைப்படுவதாக இத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய பொருளாதார மந்த நிலை என்பது இத்துறையை பொறுத்தளவில் தற்காலிகமானது தான் என்றும் எதிர்காலத்தில் இந்தியாவில் டெக்ஸ்டைல் மற்றும் அப்பாரல் துறையில்அபரிமிதமான வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.
படிப்புகள்
அப்பேரல் மேனேஜர்,மெர்கன்டைசர் சம்பந்தப் பட்ட இளநிலை, முதுநிலை, டிப்ளமோ படிப்புகளை இந்தியாவிலேயே படிக்கலாம். எம்.பி.ஏ அப்பேரல் மேனேஜ்மென்ட் படிப்புகளும் சில கல்விநிறுவனங்கள் கற்றுதருகின்றன. டில்லியிலுள்ள "பேர்ல் அகாடமி ஆப் பேஷன்' எனும் கல்வி நிறுவனத்தில் ஓர் ஆண்டு தொழில் படிப்புப் பிரிவில் இப்படிப்பு கற்றுதரப்படுகின்றன.
வேலைவாய்ப்பு
இது ஒரு உலகளாவிய துறை என்பதால் இந்தியா தவிர அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பணியாற்றுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இத்துறையை பொறுத்தமட்டில் துவக்கத்திலேயே ரூ.15,000 முதல் 20,000 வரை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. ஏனெனில் வங்கதேசம் போன்ற நாடுகள் இந்த துறையில் இந்தியாவிற்கு கடுமையான போட்டியாக இருப்பதால் பல நிறுவனங்கள் திறமையானவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வேண்டுமானாலும் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன.
கல்வி நிறுவனங்கள்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி,சென்னை (www.nift.ac.in)
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி,டில்லி
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி,மும்பை
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி,ஐதராபாத்
* "பேர்ல் அகாடமி ஆப் பேஷன்' , புதுடில்லி (www.pearlacademy.com)
* இன்ஸ்டிடியூட் ஆப் அப்பேரல் மேனேஜ்மென்ட், மும்பை ((www.iamindia.in)
* இன்ஸ்டிடியூட் ஆப் அப்பேரல் மேனேஜ்மென்ட், குர்கான்
