தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.சி.ஏ.டி.,யின் புதிய டிப்ளமோ படிப்புகள்

ஐ.சி.ஏ.டி.,யின் புதிய டிப்ளமோ படிப்புகள்

ஐ.சி.ஏ.டி.,யின் புதிய டிப்ளமோ படிப்புகள்


ஜூலை 26, 2010 12:00 AM

ஜூலை 26, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 26, 2010 12:00 AM ஜூலை 26, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள ஐ.சி.ஏ.டி.,(இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ், அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி) கல்வி நிறுவனம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது டிப்ளமோ பிரிவில், ஜர்னலிசம் (நியூ மீடியா) மற்றும் அட்வர்டைசிங் டிசைன் என இரண்டு புதிய முதுநிலை டிப்ளமோ படிப்புகளை துவங்கி உள்ளது.

ஐ.சி.ஏ.டி.,கல்வி நிறுவனம் சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. இங்கு லண்டனில் உள்ள வாலஸ் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலுடன் இளநிலை பட்டப்படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள் ஜர்னலிசம் டிப்ளமோ
ஒரு வருட கால அளவு கொண்ட ஜர்னலிசம்நியூ மீடியா டிப்ளமோ படிப்பு சென்னையில் உள்ள ஐ.சி.ஏ.டி.,நிறுவனத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்புடன் நன்கு எழுதும் திறன் , பொது அறிவில் ஈடுபாடு, மொழிபெயர்க்கும் திறன் கொண்ட மாணவர்கள் இந்த டிப்ளமோ படிப்பில் சேரலாம். இந்த டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட துறைகளில் பணியில் அமரலாம்.

அட்வர்டைசிங் டிசைன்
அட்வர்டைசிங் டிசைன் படிப்புகள் பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள ஐ.சி.ஏ.டி.,கல்வி நிறுவனங்களில் கற்றுத்தரப்படுகின்றன. இந்த டிப்ளமோ படிப்பு ஒரு வருட கால அளவு கொண்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேரமுகத் தேர்வின் அடிப்படையில் இந்த படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.icat.ac.in என்ற இணையதளத்தை பாருங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us