ஆக 02, 2010 12:00 AM
ஆக 02, 2010 12:00 AM
நாட்டில் ஓடும் நதிகளை பாதுகாக்க வேண்டியது "ரிவர் கன்சர்வேசனிஸ்டுடைய' முக்கிய பணியாகும். என்.ஜி.ஓ.,எனப்படும் அரசு சாரா பணியாளராக பொதுமக்களிடம் நதிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அரசாங்கத்தின் கவனத்திற்கு நதிகளின் நிலையை கொண்டு செல்வதும் ரிவர் கன்சர்வேசனிஸ்ட் தான். சுற்றுசூழல் இன்ஜினியர்கள், தண்ணீர் மற்றும் காற்றில் மாசு ஏற்படும் மூல காரணிகளை கண்டறிந்து தடுக்கும் பணியை செய்கிறார்கள். எனவே ஹைட்ராலஜிஸ்ட் மற்றும் வாட்டர் இன்ஜினியர்களும் ரிவர் கன்சர்வேசனிஸ்டாக ஆகலாம். அதுமட்டுமின்றி ரிவர் கன்சர்வேசனிஸ்ட் சுற்றுசூழல் சட்டங்களை பற்றியும் பயில்வது மிகவும் முக்கியம் ஏனெனில் நதிநீர் மாசுபடுதல் போன்ற பிரச்சனைகளில் சட்ட ரீதியாக நடிவடிக்கைகள் எடுக்க, இது உதவியாக இருக்கும்.
ஊதியம்:
இந்த துறையில் ஆராய்ச்சியாளர்கள்,விஞ்ஞானிகளுக்கு ரூ.50,000 முதல் 1 லட்சம் வரையும், என்.ஜி.ஓ., பணியாளர்கள் ரூ.10,000 முதல் 1 லட்சம் வரையும் மாத வருமானமாக பெறலாம்.
தேவையான திறன்கள்:
மக்களிடையே நதிகளின் நிலையை குறித்து விளக்கி அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பான பேச்சாற்றல் தேவை. தலைமை பண்பு,சாதுர்யமாக செயல்படுவதற்கான புத்திகூர்மை ஆகியவை தேவைப்படும் தகுதிகள்.
கல்வி நிறுவனங்கள்:
இந்திய சட்ட மையம் ,புதுடில்லி (என்விரான்மென்டல் லா அன்டு மேனேஜ்மென்ட் முதுநிலை டிப்ளமோ படிப்பு) www.ilidelhi.org டில்லி பல்கலைகழகம் (எம்.எஸ்சி., என்விரான்மென்டல் பயாலஜி) www.du.ac.in டில்லி தொழில்நுட்ப பல்கலைகழகம் (எம்.டெக்., இன் சிவில் இன்ஜினியரிங்) www.dce.edu ஸ்கூல் ஆப் என்விரான்மென்டல் சயின்ஸ், ஜவஹர்லால் நேரு பல்கலை (எம்.எஸ்சி.,) என்விரான்மென்டல் சயின்ஸ்) www.jnu.ac
ஐ.ஐ.டி.,ரூர்க்கி (முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்.டெக்.,புரொகிராம் இன் ஹைடுராலஜி) www.iitr.ac.in
