ஆக 02, 2010 12:00 AM
ஆக 02, 2010 12:00 AM
டில்லியில் ஈரா பிசினஸ் ஸ்கூல் (இ.பி.எஸ்.,) என்ற புதிய மேலாண்மை கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஈரா
குரூப் ஆப் கம்பெனி இந்த புதிய கல்வி நிறுவனத்தை துவக்குகிறது.
இங்கு இரண்டு ஆண்டு போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்.,) படிப்பு மட்டும் இந்த ஆண்டு துவக்கப்படவுள்ளது. இந்த படிப்புக்கு 120 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். அடுத்த ஆண்டு முதல் இரண்டு வருட இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பும் இந்த கல்வி நிறுவனத்தில் சேர்க்கப்படவுள்ளது. இந்த இ.பி.எஸ்., மேலாண்மை கல்வி நிறுவனத்தின் வகுப்புகள் தாவர்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இங்கு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு சிறந்த வங்கிகளில் இருந்து கல்விக்கடனும் பெற்றுத் தரப்படுகிறது. மேலும் இந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தின் விபரங்களை http://www.ebs.ac.in/home.html என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
