தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தடைகளைத் தகர்க்கும் இந்தியப் பணியாளர்கள்

தடைகளைத் தகர்க்கும் இந்தியப் பணியாளர்கள்

தடைகளைத் தகர்க்கும் இந்தியப் பணியாளர்கள்


ஆக 25, 2010 12:00 AM

ஆக 25, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 25, 2010 12:00 AM ஆக 25, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரிட்டனிலுள்ள டேவிட் கேமரூன் அரசு ஐரோப்பிய நாடுகளைச் சாராத நாடுகளிலிருந்து பணிக்காக பிரிட்டனுக்கு வருபவர்களைப் பல்வேறு கட்டுப்பாடுகளின் மூலமாக தடை செய்து வருவது நாம் அறிந்தது தான். இதற்காக இமிக்ரேஷனில் பல்வேறு விதிகளை அந்த நாடு கடைபிடித்து வருகிறது. ஆனால், இந்தத் தடைகளெல்லாம் இந்தியர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று இந்தியப் பணியாளர்கள்
நிரூபித்துள்ளார்கள்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் பிரிட்டனுக்கு 37 ஆயிரம் பேர் பணிபுரியச் சென்றுள் ளார்கள் என்ற தகவல் இதனை உறுதி செய்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பிரிட்டனில் மொத்தம் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் பணிபுரியத் துவங்கியுள்ளார்கள். இதில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள். பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 41 ஆயிரம் மட்டும்தான். வெளி நாட்டினரில் பாதிக்கும் அதிக எண்ணிக்கையான 77 ஆயிரம் பேர் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளைச் சார்ந்தவர்கள் ஆவர்.

இவர்களுக்கு பிரிட்டனில் பணி புரிவதற்கான உரிமை உள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சாராத நாடுகளிலிருந்து வந்தவர்களில் 37 ஆயிரம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதிலிருந்து இந்தியத் திறனாளர்களின் தேவை பிரிட்டனை நன்றாகவே ஆட்டுவிக்கிறது என்பதனை அறியலாம். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐ.டி., துறையைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும். ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில் முன்னேற்றம் ஐ.டி., துறையில் நாஸ்காம் எனப்படும்

நேஷனல் அசோசியேஷன் ஆப் சாப்ட்வேர் அண்டு சர்வீஸ் கம்பெனி என்ற நிறுவனத்தைப் பற்றி நாம் நன்றாகவே அறிவோம். இந்த நிறுவனம் சமீபத்தில் தனது வருட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இந்த நிதியாண்டுக்குள் ஐ.டி., மற்றும் பீ.பி.ஓ., துறைகளின் ஏற்றுமதி 13 முதல் 15 சதவிகித வளர்ச்சி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் 15 முதல் 17 சதவிகித வளர்ச்சி பெறும் என்றும் நாஸ்காம் கணிப்பு தெரிவித்துள்ளது.

2009-2010ஆம் ஆண்டுக்கான இந்தியாவைச் சேர்ந்த முதல் 20 ஐ.டி., மற்றும் பீ.பி.ஓ., நிறுவனங்களையும், பி.பி.ஓ.,பணிவாய்ப்பாளர்களையும் நாஸ்காம் தரவரிசைப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியாவில் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஏற்றுமதியில் டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிதியாண்டில் கோர் துறை மற்றும் புதிதாக உருவாகும் சந்தைகளால் இந்தியாவின் ஐ.டி., துறை அபாரமான வளர்ச்சிஅடையும் என்று நாஸ்காம் கூறுகிறது.

பி.பி.ஓ., அனலிடிக்ஸ், பினான்ஸ் அண்டு அக்கவுண்டிங், ரிமோட் இன்பிராஸ்டரக்சர் மேனேஜ் மென்ட், ஏ.டி.எம்., கிளவுட் சர்வீஸஸ் என்ற வழிகளில் இந்தியாவின் ஐ.டி., மற்றும் பீ.பி.ஓ., துறைகள் அபாரமான வளர்ச்சி பெறும் என்று இந்த நிறுவனத்தின் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிறுவனத்தில் இந்த ஆண்டுக்குள் 2 லட்சம் பேருக்குப் புதிய பணி வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐ.டி., மற்றும் பி.பி.ஓ.,துறையின் வளர்ச்சிப் பாதைக்கான மிக முக்கிய ஆண்டாக இருக்கும் என்று நாஸ்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us