தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வியக்க வைக்கும் ஆந்த்ரோபாலஜி துறை!

வியக்க வைக்கும் ஆந்த்ரோபாலஜி துறை!

வியக்க வைக்கும் ஆந்த்ரோபாலஜி துறை!


ஆக 26, 2010 12:00 AM

ஆக 26, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 26, 2010 12:00 AM ஆக 26, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆந்த்ரோபாலஜி என்ற கிரேக்க மொழி வார்த்தைக்கு மனிதனை பற்றிய படிப்பு என்பது அர்த்தம். ஆந்த்ரோபாலஜி என்பது தமிழில் மானுடவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித குலத்தை சமூக பண்பாட்டு ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் ஆராய்வது தான் மானுடவியல் துறை. எல்லா காலத்தை சேர்ந்த மனிதர்களும் இந்த ஆராய்ச்சியில் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

மானுடவியல் மரபு வழியாக நான்கு துணைபிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அவைகளாவன:

* உயிரியல் அல்லது உடலியல் சார்ந்த மானுடவியல்: இப்பிரிவில் மனித இனத்தின் பரிணாமத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை
அறியலாம். நம்முடைய மூதாதையருக்கும் நமக்கும் உள்ள தொடர்பை பயிலலாம். வெவ்வேறு இனம், மரபியல் மற்றும் பல சூழல்களில் மனிதர்களின் வாழ்க்கை போன்றவற்றை இப்பிரிவு கையாளுகிறது.

* சமூகம் சார்ந்த மானுடவியல்: இப்பிரிவில் சமூகம் மற்றும் கலாசாரம் சார்ந்த செய்திகளை அறியலாம். பல வழிமுறைகளில் சமூகங்களை
துவக்கியது, இனங்களுக்கு ஏற்றவாறு கலாசாரங்களை அமைத்தது, கலப்பு இனங்களை உருவாக்கியது உள்ளிட்ட பலவற்றை இதில் அறியலாம்.

* ஆர்க்கியாலஜி: பழங்கால நினைவுச்சின்னங்களின் வயதை கண்டறிதல் இப்பிரிவின் கீழ் கற்றுத்தரப்படுகின்றன.

* மொழிசார்ந்த மானுடவியல்: எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத மொழிகளைப் பற்றிய ஆய்வுகள் இப்பிரிவின் கீழ் செயல்படுகின்றன.

கல்வித் தகுதி:
பிளஸ் 2 வில் அறிவியலை பாடமாக எடுத்து படித்தவர்கள் ஆந்த்ரோபாலஜி இளநிலை படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஆந்த்ரோபாலஜி
படிப்பு மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இந்த துறையில் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு:
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் அதிக சம்பளத்தில் ஆந்த்ரோபாலஜி படித்தவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். யுனெஸ்கோ., யுனிசெப்., உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் ஆந்த்ரோபாலஜி படித்தவர்கள் வேலையில் சேரலாம். பி.எஸ்.சி., ஆந்த்ரோபாலஜி, எம்.எஸ்.சி., ஆந்த்ரோபாலஜி படிப்புகளை இந்தியாவிலேயே பல்வேறு பல்கலைக் கழகங்களும், கல்வி நிறுவனங்களும் பயிற்றுவிக்கிறது.

கல்வி நிறுவனங்கள்:
ஆந்த்ரோபாலஜி படிப்புகளை கற்றுத்தரும் இந்திய கல்வி நிறுவனங்கள் சில
* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம்
*  டில்லி பல்கலைக்கழகம், டில்லி
* குருசேத்ரா பல்கலைக்கழகம், அரியானா
* திப்ருகர் பல்கலைக்கழகம், அசாம்
* வித்யாசாகர் பல்கலைக்கழகம், மேற்குவங்கம்
* பெர்காம்பூர் பல்கலைக்கழகம், ஒரிசா
* ஸ்ரீவெங்டேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி

பெங்களூரு, ஜெய்ப்பூர், மைசூர், மணிப்பூர் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள மேலும் பல பல்கலைக்கழகங்களில் ஆந்த்ரோபாலஜி படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us