தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/உங்கள் படிப்பின் மீது குழப்பமா

உங்கள் படிப்பின் மீது குழப்பமா

உங்கள் படிப்பின் மீது குழப்பமா


ஆக 31, 2010 12:00 AM

ஆக 31, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 31, 2010 12:00 AM ஆக 31, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கைக்கு பலர் அடியெடுத்து வைத்திருப்பீர்கள். நீங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த படிப்பையோ அல்லது பிறர் சொன்ன துறையை கேட்டோ கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பீர்கள். அவர்களில், பலருக்கு புதிய கல்லூரி, நண்பர்கள், சூழல் என அனைத்தும் பிடித்திருக்கும். ஆனால் சிலருக்கு ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம்? என்று தோன்றும். அது போன்ற மனநிலையை பெற்றவர்கள் அதற்கான காரணத்தை அறியுங்கள்.

இதோ சில காரணங்கள்:
* உங்களுடன் பள்ளியில் படித்த பழைய நண்பர்கள் இல்லாமல் இருக்கலாம். அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கலாம்.

* தேர்ந்தெடுத்துள்ள துறை கடினமானதாகவோ, உங்களால் படிக்க முடியாததாகவோ இருக்கலாம்.

* இதைப் படித்தால் எதிர்காலம் என்னவாகும்? என்ற ஏக்கம் ஏற்படலாம்.

இதில் முதல் காரணத்தால் உங்களுக்கு படிப்பு பிடிக்கவில்லை என்றால் கவலை கொள்ளாதீர்கள். பொறுமையாக இருங்கள். நாட்கள் செல்ல செல்ல, நண்பர்கள், ஆசிரியர்களுடன் சுமூகமாக பழகும் சூழல் ஏற்படுத்துங்கள். மேலும் பாடத்தின் மீது உங்கள் ஈர்ப்பை அதிகப்படுத்தினால் அது தேவையற்ற சிந்தனைகளை அகற்றும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது காரணங்களால் உங்களுக்கு இந்த படிப்பு பிடிக்கவில்லை என்றால் சற்று சிந்தியுங்கள். எந்த பாடம் உங்களுக்கு கடினமானதாக உள்ளதோ அதை அன்றாடம் படியுங்கள். அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியரிடம் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். இதை முடித்தால் வேலை கிடைக்குமா? என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.ஏனெனில் நம்மில் பலர் படித்த துறை தொடர்பான வேலைக்கு செல்வதில்லை.

உங்கள் பெற்றோர், நண்பர்கள், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களிடம் கலந்து ஆலோசியுங்கள். இதன் மூலம் நீங்கள் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளலாம். எந்த ஒரு முடிவானலும் அவசரப்படாமல் நிதானமாக எடுத்து படிப்பிலும், வாழ்விலும் வெற்றி காணுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us