ஆக 31, 2010 12:00 AM
ஆக 31, 2010 12:00 AM
நவீன காலத்துறைகளில் ஒன்றான லேசர் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. இந்த லேசர் டெக்னாலஜி பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சி.டி., டி.வி.டி., லேசர் பிரின்ட்டர், வெல்டிங் பட்டறைகள் மற்றும் மருத்துவ துறையில் லேசர் சர்ஜரி போன்ற எண்ணற்ற துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பு தளவாடங்கள், தகவல் தொடர்பு கருவிகள், 3டி தொழில்நுட்பக் கருவிகள் என அனைத்து நவீன கருவிகளிலும் லேசர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் உள்ளது.
எம்.டெக்., போன்ற படிப்புகளில் தான் இவை பெரும்பாலும் கற்றுத்தரப்படுகின்றன. இந்த துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளன. இது தவிர இந்த துறையில் பல்வேறு நவீன ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை காத்திருக்கிறது.
கல்வி நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., கான்பூர் (www.iitk.ac.in)
* கொச்சி பல்கலைக்கழகம், கொச்சின் (www.cusat.ac.in)
* டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், மும்பை (www.tifr.res.in)
* புனே பல்கலைக்கழகம், புனே (www.unipune.ac.in)
* கேரளா பல்கலைக்கழகம், கேரளா (www.keralauniversity.edu)
* ராஜா ரமணா சென்டர், இந்தூர் (www.cat.gov.in)
