தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கூச்சத்தை தவிர்க்க....

கூச்சத்தை தவிர்க்க....

கூச்சத்தை தவிர்க்க....


செப் 30, 2010 12:00 AM

செப் 30, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 30, 2010 12:00 AM செப் 30, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம்.
கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம்.

உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிறது. எளிமையாக பேச ஆரம்பியுங்கள்: புதிய நபருடன் பேச ஆரம்பிக்கும் போது தங்களுக்கு தெரிந்த எளிமையாக விஷயங்களை கொண்டு உரையாடலை துவக்குங்கள். இதனால் பதட்டம் குறைந்து, அந்த உரையாடல் சிறப்பானதாக அமையும்.

நண்பர்களுடன் ஆழ்ந்து உரையாடுங்கள்: நண்பர்களுடன் ஆழ்ந்து மனம்விட்டு பேசுவதால் தங்களது, பேசும் திறன் கூடும். இதனால் புதிய நபர்களிடம் உரையாடுவது எளிமையாக இருக்கும். மேலும் நண்பர்களிடம் உணர்ச்சிப் பூர்வமாக உரையாடுவதன் மூலமாக, தங்களது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எந்த நிலையிலும் ஆயத்தமாக இருங்கள்: ஒரு முக்கியமான உரையாடலுக்கு அல்லது நேர்முகத் தேர்வுக்கு கலந்து கொள்ள எந்த நிலையிலும் ஆயத்தமாக இருங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும், தங்களுக்கு தெரிந்த விஷயங்ளை தைரியமாக எடுத்துக்கூற பழகிக் கொள்ளுங்கள்.

சூழ்நிலைகளை தவிர்க்காதீர்கள்: ஒரு சந்திப்பிலோ அல்லது நேர்முகத் தேர்விலோ கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது மிகவும் தவறான செயல். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இதனால் தங்களது தன்னம்பிக்கை அதிகரித்து, வாழ்வில் எளிதில் சாதிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us