அக் 05, 2010 12:00 AM
அக் 05, 2010 12:00 AM
அ நிறம் | அளவு
ஆல் இந்தியா மேனேஜ்மென்ட் அசோசியேஷன் ( ஏ.ஐ.எம்.ஏ.,), நாட்டில் உள்ள "பிஸ்கூல்' கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஆன்லைன் போட்டித் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வு மாணவர்களின் ஆப்டிடியூட் அறிவை சோதிக்கும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறுவர். இத்தேர்வு 2011, பிப்., 20ம் தேதி நடைபெறலாம் என்று தெரிகிறது. இது மாணவர்கள் மற்றும் நிறுவனங்கள் என இருதரப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஏ.ஐ.எம்.ஏ., அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு www.aimaind.org
