தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பர்னிச்சர் டிசைனர்

பர்னிச்சர் டிசைனர்

பர்னிச்சர் டிசைனர்


நவ 11, 2010 12:00 AM

நவ 11, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 11, 2010 12:00 AM நவ 11, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீடு, மருத்துவமனை, அலுவலகம், விமான நிலையம் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் தற்போது உள்வடிவமைப்புக்கு (இன்டீரியர் டிசைனிங்) முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பர்னிச்சர் டிசைனிங் துறைக்கு நல்ல மவுசு உள்ளது. பர்னிச்சர் டிசைனிங் துறையில் இனி வரும் ஆண்டுகளில் 35,000 கோடி ரூபாய் வரை முதலீடுகள் குவியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பர்னிச்சர் டிசைனிங் என்றவுடன் நாற்காலி, மேஜைகளை செய்பவர்கள் என்ற தவறான எண்ணம் நிலவுகிறது.

கலை நயத்துடன் கூடிய வடிவமைப்பாளர்களே பர்னிச்சர் டிசைனர்களாக கருதப்படுகிறார்கள். இத்தகைய பொருட்களை செய்ய பயன்படும் பலவகையான மரங்கள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். பர்னிச்சர் டிசைனிங் சார்ந்த துறைகளாக இண்டஸ்டிரியல் டிசைனிங், கிராப்ட் டிசைனிங், ஸ்டரக்சுரல் டிசைனிங் ஆகியவை விளங்குகின்றன.

திறன்கள்
புதுமையான சிந்திக்கும் திறன், கலைநயத்துடன் கூடிய ரசிக்கும் மனப்பாங்கு போன்ற திறமைகள் திறமையான ஒரு பர்னிச்சர் டிசைனருக்கு தேவையான அடிப்படைத் தகுதியாக கருதப்படுகிறது.

வேலைவாய்ப்பு
இந்தியாவில் திறமையான தகுதிவாய்ந்த பர்னிச்சர் டிசைனர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த எண்ணிக்கையிலே இருப்பதாகவே புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பர்னிச்சர் டிசைனிங் சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கு இந்தியாவிலேயே ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல மவுசு உள்ளது.

கல்வி நிறுவனங்கள்
*  ஐ.ஐ.டி., மும்பை
*  என்.ஐ.டி., ஆமதாபாத்
*  சிருஷ்டி கல்வி நிறுவனம், பெங்களூரு
*  எம்.ஏ.இ.இ.ஆர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், புனே
*  டிசைன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இந்தூர்
*   ஐ.ஐ.எல்.எம், குர்கான்
*  ஐ.வி.எஸ் இந்தியா இன்ஸ்டிடியூட், புதுடில்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us