தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கப்பல் கட்டுமானம் படிக்க...

கப்பல் கட்டுமானம் படிக்க...

கப்பல் கட்டுமானம் படிக்க...


நவ 17, 2010 12:00 AM

நவ 17, 2010 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 17, 2010 12:00 AM நவ 17, 2010 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகில் உள்ள 70 சதவீத பயணிகள் கப்பல்கள் இந்திய கடல் வழியாக கடந்து செல்கின்றன. கப்பல் கட்டுமானம் (Naval Architecture) தொடர்பான படிப்புகளுக்கு வரவேற்பு அதிகம் காணப்படுகிறது. அதை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம்.

* ஐ.ஐ.டி.,,சென்னை பி.இ.,பிரிவில் கப்பல் கட்டுமானம் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது. ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.  விவரங்களுக்கு oec.iitm.ac.in

* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் பி.இ., கப்பல் கட்டுமானம் படிப்பு இக்கல்வி நிறுவனத்தால் கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு andhrauniversity.info

* ஐ.ஐ.டி.,, காரக்பூர் இக்கல்வி நிறுவனத்தால் பி.இ., மற்றும் எம்.டெக்.,பிரிவுகளில் கப்பல் கட்டுமானம் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iitkgp.ac.in

* கடற்படை இன்ஜினியரிங் கல்லூரி, புனே இக்கல்வி நிறுவனம் இந்திய கடற்படையால் நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.டெக்., கப்பல் கட்டுமானம் படிப்பு உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டமும், இந்திய கடற்படையிலிருந்து அங்கீகாரமும் பெறுவார்கள். விவரங்களுக்கு www.insshivaji.edu.in

* கப்பல்கட்டுமானம் கல்வி நிறுவனம், கோவா கப்பல் கட்டுமானம் தொடர்பான நான்கு வருட டிப்ளமோ படிப்பு இங்கு உள்ளது. விவரங்களுக்கு isbt.ac.in

* கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சி இங்கு பி.டெக்.,பிரிவில் கப்பல் கட்டுமான படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. விவரங்களுக்கு shiptech.cusat.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us