டிச 13, 2010 12:00 AM
டிச 13, 2010 12:00 AM
வைராலஜி என்பது வைரஸ்கள் மற்றும் அவற்றை போன்று செயல்படும் ஏஜன்டுகள் உள்ளிட்டவற்றின் வடிவமைப்புகள், செயல்பாடுகள், குணநலன்கள் உள்ளிட்டவற்றை படிக்கும் உயிரியல் சார்ந்த அறிவியல் துறையாகும். இத்துறையில் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல்களை காண்போம்.
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, புனே இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் வைராலஜி கற்றுத்தரப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்பில் மருத்துவம், நுண்ணுயிரியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.niv.co.in
* கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி, வேலூர் இங்கு முதுநிலை டிப்ளமோ படிப்பில் மெடிக்கல் வைராலஜி என்ற படிப்பு வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.cmchvellore.edu/
* மணிப்பால் வைரஸ் ஆய்வு கல்வி நிறுவனம், மணிப்பால் இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் கிளினிக்கல் வைராலஜி என்ற படிப்பு உள்ளது. இளநிலை படிப்பில் மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம். விவரங்களுக்கு www.manipal.edu
* ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி இங்கு வைரலாஜியில் இரண்டு வருட முதுநிலை பட்டப்படிப்பு உள்ளது. விவரங்களுக்கு www.svuniversity.in/
* கிங் தடுப்பு மருந்துகள் ஆய்வு கல்வி நிறுவனம், சென்னை இரண்டு ஆண்டு மாலிக்குலர் மற்றும் டையக்னாஸ்டிக் வைராலஜி என்ற முதுநிலை பட்டப்படிப்பு இங்கு உள்ளது. விவரங்களுக்கு www.tnhealth.org/meking.htm
