தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரீபெய்டில் காய்கறிகள்

பிரீபெய்டில் காய்கறிகள்

பிரீபெய்டில் காய்கறிகள்


பிப் 01, 2011 12:00 AM

பிப் 01, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 01, 2011 12:00 AM பிப் 01, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., ஆமதாபாத் கல்வி மையத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவரான கவுஸ்லேந்ரா (Kaushlendra) "பிரீபெய்டு' திட்டத்தில் காய்கறிகளை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளார். இது குறித்து அந்த மாணவர் கூறுகையில், காய்கறிகளை குளிர்பதன பெட்டி அடங்கிய வண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படும். இந்த திட்டத்திற்கு "ஆர்கனைஸ்டு வெஜிடபிள் மார்க்கெட்டிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதன்முதலில் லக்னோவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி நுகர்வோர்கள் ரூ.500 அல்லது ரூ.1000 செலுத்தி "பிரீபெய்டு' முறையில் காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டம் மாத பட்ஜெட்டில் காய்கறி செலவை கட்டுப்படுத்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரிதும் உதவும்.

இந்த "பிரீபெய்டு' அட்டைகளை வைத்து காய்கறிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக காய்கறிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக லக்னோ பகுதியை சேர்ந்த 500 விவசாயிகள் இத்திட்டத்தில் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கவுஸ்லேந்ரா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us