தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள்

பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள்

பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள்


பிப் 21, 2011 12:00 AM

பிப் 21, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 21, 2011 12:00 AM பிப் 21, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வனங்கள் மற்றும் வன உயிரினங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து படிக்கும் அறிவியல் துறைகள். காட்டு வளங்களை பாதுகாப்பாகவும், சமநிலையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்த பணியை முழுமையாக செய்வதற்கு, சிறந்த பயிற்சி பெற்ற வல்லுநர்கள் தேவை.

காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது இவற்றை தடுக்கவும், காட்டு விலங்குகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்ந்த படிப்புகள் உதவுகின்றன. இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் வனத்துறை சார்ந்த படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இளநிலை படிப்பு
பி.எஸ்சி., பாரஸ்டிரி
பி.எஸ்சி., வைல்டு லைப்

தகுதிகள்
3 முதல் 4 ஆண்டு கால அளவுள்ள இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ்2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது வேளாண்மை பாடங்களை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.

முதுநிலை படிப்பு
எம்.எஸ்சி., பாரஸ்டிரி
எம்.எஸ்சி., வைல்டு லைப்
எம்.எஸ்சி., உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி

தகுதிகள்
2 ஆண்டு கால அளவுள்ள முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் நிலவியல் உள்ளிட்ட துறைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். அல்லது இளநிலை வேளாண்மை அல்லது இளநிலை பாரஸ்டிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியாவில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் பாராஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கல்வி நிறுவனங்கள்
* இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிட்டிக்ஸ் அண்டு டிரீ பிரீடிங், கோவை.(ifgtb.icfre.gov.in)
* இன்ஸ்டிடியூட் ஆப் உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, பெங்களூரு. (iwst.icfre.gov.in)
* பாரஸ்ட் ரிசர்ச் சென்டர், ஐதராபாத். (frc.icfre.gov.in)
* பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன். (fri.icfre.gov.in)
* பிர்ஸா வேளாண் பல்கலைக்கழகம், ராஞ்சி. (www.baujhar khand.org)
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட், நேரு நகர், போபால். (www.iifm.ac.in)
* ஒரிசா வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், புவனேஸ்வர். (www.ouat.ac.in)
* வைல்டு லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, டேராடூன். (www.wii.gov.in)
* ஹிமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா. (hfri.icfre.gov.in)

வேலைவாய்ப்பு
வனத்துறைச் சார்ந்த படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு இந்திய அரசு, வனக்காவலர், மரஆய்வாளர், பூச்சிகளை ஆய்வு செய்பவர், விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்பவர், மரங்களை வளர்த்து பாதுகாப்பவர், வனச்சரக அலுவலர் மற்றும் மிருகங்களை பாதுகாப்பவர் உள்ளிட்ட பிரிவுகளில் பணி வாய்ப்பை வழங்குகிறது. இது தவிர வெளிநாடுகளிலும் குறிப்பாக கம்போடியா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், அதிக அளவு இந்தியர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us