தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கவனத்தைக் கவரும் சில்லறை வியாபார படிப்புகள்

கவனத்தைக் கவரும் சில்லறை வியாபார படிப்புகள்

கவனத்தைக் கவரும் சில்லறை வியாபார படிப்புகள்


ஏப் 05, 2011 12:00 AM

ஏப் 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2011 12:00 AM ஏப் 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகின் வியாபார நடைமுறையில் சில்லறை வணிகம் என்பது எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால் அந்த முக்கியத்துவமானது கடந்த சில வருடங்களாக புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் சில்லறை வணிகமானது அதிக லாபம் தரும் நடைமுறையாக இருப்பதால், பெரிய வணிக நிறுவனகள் முதல் பல தரப்பாரும் அதில் ஈடுபட்டு, புதிய முயற்சிகளை மேற்கொண்டு, பணத்தை குவித்து வருகின்றனர்.

ஒரு துறையில் பணம் குவிந்தாலே, அந்த துறைக்கு நிபுணர்களின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் சில்லறை விற்பனைத் துறைக்கு தற்போது அதிக மனித வளம் தேவைப்படுவதால், அத்துறை சம்பந்தமான படிப்புகள் புதிய பரிணாமங்களை அடைந்துள்ளன. அது சம்பந்தமான படிப்புகளை படித்தோர் நல்ல சம்பளத்தில் ஆபரேஷன் மேனேஜர், ஸ்டோர் மேனேஜர், விஷுவல் மேர்கண்டைசர், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் போன்ற பதவிகளில் அமர முடியும்.

கல்வி நிறுவனங்கள் இத்துறை சம்பந்தமான ஒரு வருட டிப்ளமோ படிப்பை கொண்டிருந்தாலும், போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்) என்ற முழுமையான இரண்டு வருட படிப்புதான் இத்துறையில் பெயர்பெற்றது. இந்த பி.ஜி.டி.எம் படிப்பின் முதல் வருடத்தில் ஒரு மாணவர் சில்லறை வியாபாரத்தின் கருத்தாக்கம், சந்தைப்படுத்தல், சரக்குப் போக்குவரத்து, வழங்கல் மேலாண்மை, நிதி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவைப் பற்றி கற்கிறார். இரண்டாம் வருடத்தில் ஒரு மாணவர் ஸ்டோர் ஆபரேஷன் அண்ட் டிசைன், விஷுவல் மேர்கண்டைசிங், வகை மேலாண்மை, மால் மேனேஜ்மென்ட், கஸ்டமர் லாயல்டி போன்றவைப் பற்றி கற்கிறார்.

தற்போது வணிக கல்வி நிறுவனங்களில் இந்த சில்லறை வியாபாரம் சம்பந்தமான படிப்புகளில் மாணவர் சேர்க்கை நிரம்பி வழிகிறது. மேலும் இந்த படிப்பிற்கான திட்ட வடிவமைப்பானது அசைன்மெண்ட்ஸ், ப்ராஜெக்ட்ஸ், கேஸ் ஸ்டடீஸ், கெஸ்ட் லெக்சர்ஸ், பீல்டு விசிட்ஸ் மற்றும் ரோல் ப்ளே ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் தியரி பாடங்கள், கோடைகால திட்டப் படிப்புகள் மற்றும் சில்லறை வணிக திட்டப் படிப்புகள் போன்றவை இந்த படிப்புகளில் உள்ளடங்கியுள்ளன.

இந்த படிப்புகள் மாணவர்களுக்கு சில்லறை விற்பனை சம்பந்தமான பரந்தளவிலான ஆய்வுப் பார்வைகளையும் சூழ்நிலை புரிதல்களையும் வழங்குகின்றன. கிராமப்புற சில்லறை விற்பனை மற்றும் உயர்தர சில்லறை விற்பனை ஆகியவற்றுக்கான வேறுபாடுகளையும், அந்த துறையில் எழும் சிக்கல்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களையும் புரிந்து அறிந்துகொள்ளக் கூடிய வகையில் மாணவர்களை இந்த படிப்பு பயிற்றுவிக்கிறது.

வகுப்பறை கல்வியோடு சேர்த்து நடைமுறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கெஸ்ட் லெக்சர் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. மேலும் அவ்வப்போது சில்லறை விற்பனை துறையில் நிகழும் மாறுதல்கள் போன்றவை கவனிக்கப்படுவதோடு, ஒவ்வொரு முந்தைய வருடத்தின் பாடத்திட்டமும் ஆசிரியர் கவுன்சில் மூலம் மதிப்பிடப்படுகிறது.

ஆனால் இந்த கல்வி அம்சங்கள் பற்றி நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சில்லறை விற்பனை சம்பந்தமான படிப்புகள் அதிகளவிலான கல்வி நிறுவனங்களில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனவே பெயர் தெரியாத, அதிகம் அறியப்படாத, உத்திரவாதமற்ற கல்வி நிறுவனங்களில், மிகக்குறைந்த கட்டணத்தில் இந்த படிப்பிற்காக சேரும் பட்சத்தில், நாம் மேற்சொன்ன அம்சங்கள் கிடைப்பதற்கு எந்தவித உத்திரவாதமும் வழங்க முடியாது. புகழ்வாய்ந்த மற்றும் பெயர்பெற்ற வணிக கல்வி நிறுவனங்களில் மட்டுமே மேற்சொன்ன சிறப்பம்சங்கள் கிடைக்க உத்திரவாதம் உண்டு. 

இந்த படிப்பில் சேரும் நடைமுறை:

முதுநிலை டிப்ளமோ படிப்பில் சேர, இளநிலை படிப்பில் குறைந்தபட்சம் 50௦ சதவிகித மதிப்பெண் தேவைப்படுகிறது. புகழ்பெற்ற வணிக கல்வி நிறுவனங்களில் சேர நுழைவுத்தேர்வில் தேற வேண்டும். இதைத்தவிர குழு கலந்துரையாடல் மற்றும் தனி நேர்காணலும் உண்டு.

மேலும் சில நிறுவனங்களில் கேட், எம்.எச்-சி.இ.டி, எக்ஸ்.எ.டி மற்றும் எ.டி.எம்.எ போன்ற நுழைவுத் தேர்வுகளின் மதிப்பெண்களும் சேர்க்கைக்காக பரிசீலிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த பி.ஜி.டி.எம் படிப்புகள் பல்வேறு வணிக கல்வி நிறுவனங்களில், பல்வேறு பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன. படிப்பிற்கான காலமும் வேறுபடுகின்றது(ஆனால் பொதுவாக இரண்டு வருடங்கள்). எனவே கல்வி கட்டணங்கள் குறைந்தது ரூ. 1.5௦௦௦ முதல் ரூ.7.75 லட்சம் வரை ஒரு வருடத்திற்கு வசூலிக்கப்படுகின்றன.

எதிர்கால வேலை வாய்ப்புகள்:

இத்துறையில் மிக நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், வணிக மாணவர்கள் இப்படிப்பை விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். இத்துறையில் சாதிக்க, மாணவர்கள் தங்களின் தலைமைப் பண்பு, மேலாண்மைத் திறன், முடிவெடுக்கும் திறன், சூழலுக்கேற்றவாறு மாறும் திறன் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம். இத்திறன்களை வளர்க்க உதவும் பொருட்டே, இப்படிப்பின் பாடத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இந்திய சில்லறை வணிக அறிக்கையின்படி, இத்துறையில் 1.5 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வருமானமும் அதிகம்.

டாமி ஹில்பிகர், வால்-மார்ட், டெஸ்கோ, சாரா போன்ற பல பெரிய சர்வதேச நிறுவனங்கள், இத்துறையில் சம்பாதிப்பதற்காக இந்தியாவிற்கு வரத்தொடங்கியிருப்பதால் வேலை வாய்ப்புகள் இத்துறையில் அதிகரிக்கின்றன. மேலும் டாட்டா, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டு ஜாம்பவான் நிறுவனங்களும் இத்துறையில் பெரியளவில் கால்பதித்திருப்பதால், வேலை வாய்ப்புகள் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதேசமயம் பொறுமை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, கண்ணியம் போன்ற குணங்கள் இத்துறையில் வெற்றிபெற தேவைப்படும் முக்கிய அம்சங்கள் என்பதையும் மறக்கலாகாது.   

                    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us