தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எம்.பி.ஏ. சேர்வதற்கான ஜி.டி/பி.ஐ. தேர்வுகளில் வெல்ல வேண்டுமா?

எம்.பி.ஏ. சேர்வதற்கான ஜி.டி/பி.ஐ. தேர்வுகளில் வெல்ல வேண்டுமா?

எம்.பி.ஏ. சேர்வதற்கான ஜி.டி/பி.ஐ. தேர்வுகளில் வெல்ல வேண்டுமா?


ஏப் 05, 2011 12:00 AM

ஏப் 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2011 12:00 AM ஏப் 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இடம்பெற, ஜி.டி. மற்றும் பி.ஐ. தேர்வுகளில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது மிக முக்கியம். பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளின் மதிப்பெண்கள், வேலை அனுபவம், கேட் போன்ற நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் ஜி.டி. எனப்படும் குரூப் டிஸ்கஷன், பி.ஐ. எனப்படும் பர்சனல் இன்டர்வியூ தேர்வு நிலைகள் இறுதி நிலையில் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.

நமது தன்னம்பிக்கை, சிந்தனைத் திறன், பொது அறிவு, சமூகம் பற்றிய பார்வை, பேச்சு திறன், மற்றவர்களை அனுசரித்து செல்லும் திறன், அக்கறை, முறையான உடை அலங்காரம், சிறப்பான உடலசைவுகள், உச்சரிப்பு, மொழித்திறன் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த 2 தேர்வுகளில் மதிப்பிடப்படும். எனவே மேற்கூறிய அம்சங்களில் உங்களின் செயல்பாடுகளை வைத்தே, எந்த மாதிரியான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உங்களுக்கு இடம் கிடைக்கும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

இந்த ஜி.டி. மற்றும் பி.ஐ. பற்றி பெரும்பாலான மாணவர்களுக்கு பலவித கற்பனைகள் இருக்கலாம். உண்மையில் அங்கே என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெரியாமல், மாணவர்களே பல வரையறைகளை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். அந்த வரையறைகள் தவறாக இருக்கும்பட்சத்தில், சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பை நாம் இழக்க நேரிடும். ஜி.டி. மற்றும் பி.ஐ. பற்றி மாணவர்களுக்கு பொதுவாக எப்படிப்பட்ட தவறான கருத்துகள் இருக்கின்றன, ஆனால் அவற்றின் உண்மைநிலை என்ன என்பது பற்றி இங்கே விரிவாக அலசலாம்.

குரூப் டிஸ்கஷன் பற்றியது:

கற்பனை: பங்கேற்பாளர்கள் சரளமாகவும், இனிமையாகவும் பேசினால், அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உண்மைநிலை: சிறந்த அறிவுடனும், தாங்கள் சொல்ல வருவதை தெளிவான அர்த்தத்துடனும் பேசினால் மட்டுமே அது சிறப்பான பங்களிப்பாக எடுத்துக்கொள்ளப்படும். மேலாண்மை கல்வி நிறுவனங்கள், பங்கேற்பாளர்களிடம் பலவித திறமைகளை எதிர்பார்க்கும். அதாவது பகுப்பாய்வு திறன், தகவல்தொடர்பு திறன், குழுத் திறன், நெருக்கடியை கையாளும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை அந்த திறமைகளில் அடங்கும். எனவே இவற்றில் கவனம் செலுத்துங்கள்.

கற்பனை: தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றவர்களே, சிறப்பான பகுப்பாய்வு திறனைக் கொண்டிருக்க முடியும்.

உண்மைநிலை: அப்படியெல்லாம் இல்லை. குறைந்த மதிப்பெண் பெற்ற பலர், தாங்கள் படித்தவற்றை நடைமுறை சூழல்களோடு சிறப்பாக பொருத்திப்பார்க்கும் திறன் பெற்றுள்ளனர். மதிப்பெண்களை விட மொழித்திறன் முக்கியம். தெளிவாக பேசுதல் மற்றும் பிறர் பேசுவதை கவனிக்கும் திறன்கள் மதிப்பிடப்படும். ஒரு நல்ல மேலாளர் பிறர் பேசுவதை நன்கு கவனிப்பவராக இருப்பார். மேலும் உங்களின் கருத்தை பிறர் எளிதாக புரியும் வண்ணம் எடுத்து சொல்லும் திறனும் முக்கியம். எனவே இத்தகைய விஷயங்களில் உங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். பல தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி பார்ப்பது சிந்தனை கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.

கற்பனை: சிறப்பாக பேசுதல் மற்றும் உரையாடுதல் என்பது, அதிகமாகவும், பல பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தியும், ஸ்டைலான மொழிநடையில் பேசுவதுமே ஆகும்.

உண்மைநிலை: நன்றாக உரையாடுதல் மற்றும் பேசுதல் என்பது நல்ல கவனம், பொருத்தமான நேரத்தில் பேசுதல், எளிமையான ஆங்கிலத்தைப் பயன்படுத்தல், சரியான நேரத்தில் சரியான முறையில் உங்களின் கருத்தை எடுத்து வைத்தல் போன்றவையே ஆகும்.

உங்களின் எதிர்கால பணியானது, குழு சம்பந்தப்பட்டதும், பல பேரை வழிநடத்தக்கூடியதுமாகும். எனவே மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மேற்கூறிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும். எனவே ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை மதிக்க கற்பதோடு, திறந்த மனதுடன் இருக்கவும், ஒரே விஷயத்தைப் பற்றி பலரும் பலவிதமாய் சிந்திப்பார்கள் என்பதையும், ஒரே தலைப்பை பல பிரிவினரும் விரும்பும் வகையில் விவாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கற்பனை: ஒரு குழு விவாதத்தில், தன் கருத்தையே மிகவும் வலியுறுத்திப் பேசி, மற்றவர்களை அதை ஒப்புக்கொள்ள வைக்கும் திறன் பெற்றவரே சிறப்பானவர்.

உண்மைநிலை: குழு விவாதமானது, நீங்கள் ஒரு தலைப்பை பற்றி என்ன தெரிந்திருக்கிறீர்கள் என்பதை தன்மையான முறையில் வெளிப்படுத்துவதோடு, மற்றவர்கள் அந்த தலைப்பை பற்றி கொண்டுள்ள அறிவையும் மதித்து, அவர்களின் கருத்தை காதுகொடுத்து கேட்க வேண்டும். அதேசமயம் குழு உறுப்பினர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு விடாமல், இசைவுத்தன்மை இருக்கும் வகையில் வழிநடத்தி செல்வதும் மிக முக்கியமான திறமையாகும்.

பர்சனல் இன்டர்வியூ பற்றியது:

குழு விவாதத்தில் பகுப்பாய்வு திறன், தகவல்தொடர்பு திறன், கவனிக்கும் தன்மை உள்ளிட்ட பல விஷயங்களை பார்த்தோம். எனவே இவற்றில் கலந்துகொள்ள பரவலான பொது அறிவும், பல விஷயங்களைப் பற்றிய விரிவான விவரங்களும் நமது மூளையில் இருக்க வேண்டும். ஆனால் பர்சனல் இன்டர்வியூ என்பது சற்று மாறுபட்டது என்பதுடன், இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும் என்பதை யூகித்து, அதற்கேற்ப தயாராகவும் முடியும். பெரும்பான்மையான பங்கேற்பாளர்களிடம் கேட்கப்படக்கூடிய கேள்விகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி: உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

பதிலுக்கு தயாராதல்: இந்த கேள்விக்கு பதில் சொல்ல நிறைய விஷயங்கள் இருப்பதுபோல் தோன்றினாலும், இதற்கும் குறிப்பிட்ட விதத்தில் தயாராக வேண்டும். உங்களின் பலம், பலவீனம் மற்றும் இயல்பு போன்றவை பற்றி முதலில் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் கவனமாகவும், தெளிவாகவும் பதிலளிக்க முடியும்.

கேள்வி: நீங்கள் எம்.பி.ஏ. படிப்பதற்கான காரணம், உங்களின் எதிர்கால லட்சியம், தற்போதைய வேலையை விடுவதற்கான காரணம் பற்றியவை.

பதிலுக்கு தயாராதல்: இந்த கேள்விகள் முற்றிலும் உங்களைப் பற்றியது. எனவே நீங்கள்தான் இதன் பதிலை முடிவுசெய்ய வேண்டும். பங்கேற்பாளர், தனக்கு விருப்பமான படிப்புகள் மற்றும் துறைகள் ஆகியவைப் பற்றி தெளிவாக தயார்செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கேள்வி கேட்பவர்கள் மகிழும் விதமாக பதிலளிக்க பயிற்சியளித்துக் கொள்ள வேண்டும்.

* உங்களை நேர்காணல் செய்பவர், தன் மனதில் இரண்டு விஷயங்களை வைத்திருப்பார். அவை, இவரை அடுத்த இரண்டு வருடங்களுக்கு எம்.பி.ஏ. படிப்பிற்காக கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கலாமா? மற்றும் இவருக்கு இப்போதிருந்து இரண்டு வருடங்களுக்குள் ஒரு வேலையை பெற்றுத்தர முடியுமா? என்பதுதான். எனவே, உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க அவரை இணங்க வைக்கும் விதத்தில் உங்களின் செயல்பாடு இருத்தல் வேண்டும்.

தனிப்பட்ட கேள்விகளை கேட்கும்போது உண்மையை பேச வேண்டும். முழுமையான கவனம், நேர்மை, முதிர்ச்சி மற்றும் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை உங்களுக்கு நேர்மறையான விஷயங்கள். எதிர்மறை எண்ணம், அகம்பாவம் மற்றும் மாறுபாட்டுத் தன்மை போன்றவை எதிர்மறையான அம்சங்கள் என்பதை மனதில் கொள்ளவும். மேலும் உங்களின் முன்மாதிரி யார்? ஏன் அவரை உங்களின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேட்கப்படும் கேள்வியானது, உங்களின் மனநிலையை தெளிவாக சோதிப்பதற்கான ஒரு கருவியாகும்.

இதுபோன்ற நேர்முகத் தேர்வில், உங்களின் கல்லூரி, தற்போது நீங்கள் படிக்கும் படிப்பு, தற்போது உங்களின் வேலை ஆகியவற்றைப் பற்றி எதுவும் எதிர்மறையாக மட்டும் பேசிவிடக்கூடாது. ஏனெனில் அதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்கள், உங்களைப் பற்றி ஒரு மோசமான எதிர்மறை எண்ணத்தை தோற்றுவிக்கும். எதிர்மறை கருத்தை தெரிவிப்பதைவிட, தெரியாது என்று சொல்வதே சிறந்தது. நேர்காணலின்போது, ஒவ்வொரு கேள்வியையும் ஆழமாக கவனித்து, அவற்றுக்கு தெளிவாகவும், சுருக்கமாகவும் பதிலளிக்க வேண்டும்.

மேற்சொன்ன ஆலோசனைகளை நீங்கள் கவனமாக படித்து பின்பற்றினால், நீங்கள் விருப்பப்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து சந்தோஷமாக படிக்க முடியும்.

 

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us