தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரிட்டனில் உயர்கல்வியா? விவரம் உள்ளே

பிரிட்டனில் உயர்கல்வியா? விவரம் உள்ளே

பிரிட்டனில் உயர்கல்வியா? விவரம் உள்ளே


ஏப் 15, 2011 12:00 AM

ஏப் 15, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 15, 2011 12:00 AM ஏப் 15, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரிட்டனில் உயர் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள், பிரிட்டன் கல்வி முறை, விசா பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிவது அவசியம்.

பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பலவும், பல்வேறு விதமான பாடப்பிரிவுகளை இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என இரண்டு பிரிவுகளின் கீழ் தருகின்றன.

கல்வி நிலையங்கள் மூலமாகத்தான் விண்ணப்பப் படிவங்கள் பெற முடியும். ஆனால், இளநிலை பட்டப்படிப்பிற்கு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் சேர்க்கை மையத்தின் (யு.சி.ஏ.எஸ்.) மூலமாகத்தான் விண்ணப்பங்கள் அனுப்பப்படும். இந்த விண்ணப்பத்தைப் பெற ஒரு சிறியத் தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.

பிரிட்டனில் இளநிலைப் பட்டப்படிப்பிற்கு வரும் அனைத்து விண்ணப்பங்களையும் யு.சி.ஏ.எஸ். தான் ஒருங்கிணைக்கும். அதற்கான இணையதளம்.. மாணவர்களுக்கு, தாங்கள் பயிலவிருக்கும் பாடப்பிரிவு, கல்வி நிலையம், தேவையான விவரங்களை தேடுதல், விண்ணப்பித்தல், சேர்க்கைக்கான விவரங்களை பின்பற்றுதல், மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுதல் என அனைத்தும் இங்கு எளிதாக இருக்கும்.

விண்ணப்பித்த பிறகு, மாணவர்களுடன் அனைத்து விவரங்கள் பற்றியும் யு.சி.ஏ.எஸ். தான் தொடர்பு கொள்ளும்.

முதுநிலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் நேரடியாக கல்வி நிலையத்தால் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலோ அல்லது விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்தோ பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக, அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் படித்து, அதன்படி பூர்த்தி செய்வது அவசியம்.

பிரிட்டனில் உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் மேலும் சில சான்றிதழ்களை இணைக்க வேண்டும். கல்வி மாற்றுச் சான்றிதழ், ஆங்கில அறிவுத்திறன் தேர்வு முடிவுக்கான சான்றிதழ், அறிமுகச் சான்று, சுய விவர அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். மாணவர்களது விண்ணப்பத்துடன், இந்த சான்றிதழ்கள் இணைக்கப்பட்டால், சேர்க்கைக்கான நடவடிக்கை எளிதாக நடைபெறும்.

விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், மாணவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அல்லது நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் அனுப்பப்படும். நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் என்றால், மாணவர்களது அனைத்துச் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு சேர்க்கை நிச்சயம் என்று அர்த்தம். நிபந்தனையுடன் கூடிய சேர்க்கைக் கடிதம் என்றால், அந்த மாணவருக்கு சேர்க்கை உண்டு, ஆனால் சில கட்டளைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று அர்த்தம். உதாரணமாக, அவரது இறுதித் தேர்வில் வெற்றி பெற்றதும் அல்லது ஆங்கில மொழித்திறன் தேர்வில் வெற்றி பெற்றதும் சேர்க்கை நடைபெறும். மேலும் சில பல்கலைக்கழகங்கள், முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களை, அவர்களது சேர்க்கை இடங்களை தக்க வைத்துக் கொள்ள முன் வைப்புத் தொகை செலுத்துமாறு கூறுகின்றன.

ஒரு வழியாக அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டால், சி.ஏ.எஸ். எனப்படும் படிப்பில் அனுமதிக்கும் சான்றிதழ் மாணவர்களுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் இந்த சான்றிதழைப் பயன்படுத்தி மாணவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.

பிரிட்டன் எல்லை நிறுவனம் (யு.கே.பி.ஏ.) புதிதாக வெளியிட்டுள்ள விசா விதிமுறைகளின்படி, தற்போது விசாவிற்காக விண்ணப்பிக்கும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையத்தில் சேர்க்கை ள
அ¦ அனுமதி பெற்ற மாணவர்கள், விசா பெறுவதற்கு, வெளிநாட்டில் தங்கி படிக்கவும், கல்விக் கட்டணம் செலுத்தவும் போதுமான பணம் தங்களிடம் இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

யு.கே.பி.ஏ.வின் இணையத்தின் மூலம், மாணவர்கள் தங்களது விசா நடைமுறைகள் குறித்து தேவையான தகவல்களையும், தாங்கள் விசா பெற தேவையான புள்ளிகளைப் பெற்றுள்ளோமா என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

பார்ன்மெளத் பல்கலையின் சர்வதேச மாணவர்களுக்கான உதவி அதிகாரி பார்பரா மோன்டாக்னா இது குறித்த விவாரங்களை நமக்கு அளிக்கிறார்.


அதாவது, மாணவர்கள், பிரிட்டனில் படிப்பதற்காக டையர் 4 (பொது) மாணவர் விசா பெற, சரியான நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டியதுதான் மிகவும் அவசியம். ஏனெனில், மாணவர் விசா பெற ஏராளமான நடைமுறைகள் உள்ளன. ஒருவேளை விசா நடைமுறைகள் முடியும் முன்பே, பாடப் பிரிவிற்கான வகுப்புகள் துவங்கிவிட்டால், பாட வகுப்பில் சேர இயலாமல் போய்விடும். எனவே, பிரிட்டனில் பாட வகுப்புகள் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்பாகவே, மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பது அவசியமாகும் என்று தெரிவித்தார்.

பாடப்பிரிவில் சேர்வதும், விசா நடைமுறைகளும் ஆரம்பத்தில் சற்று கடினமாக இருப்பது போல் தான் தோன்றும். ஆனால், பார்ன்மெளத் போன்ற பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர் சேர்க்கையை கவனிக்க என்றே தனியாக குழுக்களை நியமிக்கும். அவை சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பது முதல் சேர்க்கை வரை அனைத்து விஷயங்களையும் தனியாக கவனிக்கும். இதனால், விண்ணப்பித்துள்ள மாணவர்கள், அவர்களது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அவ்வப்போது அறிந்து கொள்ள இயலும்.

பிரிட்டன் கல்வி நிலையங்களில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், வெளிநாட்டினர் பலரையும் கல்வி நிறுவனங்கள் நியமிக்கும். இவர்கள், மாணவர்களின் சந்தேகங்கள், பொதுவான கேள்விகள், பாடப்பிரிவினைப் பற்றிய விவரங்களை அளிப்பார்கள். இந்தியாவில் உள்ள பார்ன்மெளத் பல்கலையின் ஆலோசகர்கள் விவரத்தை இந்த இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

பிரிட்டனில் உள்ள கல்வி நிலையத்தில் நீங்கள் உயர் கல்வி பயில விரும்பினால், பல்வேறு உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். மேலும், சரியான நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதற்கான முயற்சியை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்தால் நிச்சயமாக உங்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி என்ற கனவு நினைவாகும்.

உங்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்த்துகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us