ஏப் 20, 2011 12:00 AM
ஏப் 20, 2011 12:00 AM
வேளாண்மை அல்லது விவசாயம் என்பது, உணவு உட்பட அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு வகையான பயிர்களை உற்பத்தி
செய்வது; கால்நடை வளர்ப்பதை குறிப்பது. விவசாயத்தில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியினால்தான் நாகரிக உலகம் உருவானது.
ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப உணவு பொருள் உற்பத்தியில் புரட்சியைஏற்படுத்துவது இன்றைய உலகில் சவாலாக அமைந்துள்ளது. இதற்காக அனைத்து நாடுகளும் வேளாண்மையில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன.
விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நவீன கருவிகளை வடிவமைப்பதோடு, உயர்ரக விதைகள், குறுகிய கால நாற்றுகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை மற்றும் ரசாயன உரங்கள் என சங்கிலித் தொடர் போல் பல்வேறு வகை பொருட்கள் உயரிய தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர நீர்ப்பாசனங்கள் இல்லையேல் விவசாயம் இல்லை என்பதால் அணைகளில் விவசாயத்திற்காக தண்ணீரை தேக்குதல், கால்வாய்கள், குளங்கள் வெட்டுதல், வடிகால்களை சீரமைத்தல், சிக்கன நடவடிக்கைக்காக சொட்டு நீர் பாசனம் அமைத்தல், விவசாய குட்டைகள் உருவாக்குதல், கிணறுகள் தோண்டுதல், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தல் என்று அந்தந்த மாநிலங்களில் தனித்தனி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்கேற்ப சலுகைகளும், மானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை தற்போது கணிசமான அளவு குறைந்து வருகிறது. வேளாண்மையை ஊக்குவிப்பதற்காகவும், ஆராய்ச்சிகளை மேன்மைப்படுத்துவதற்காகவும் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேப்போன்று வேளாண்துறை சார்ந்த படிப்புகளும் அதிக அளவில் உள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் வேளாண்துறை சார்ந்த கல்வி மையங்கள் பெயர், விபரம்:
* ஜி.பி.பான்ட் யூனிவர்சிட்டி ஆப் அக்ரிக்கல்சர் அண்ட் டெக்னாலஜி, பான்ட்நகர் - 263145.
* சந்திர சேகர் ஆசாத் யூனிவர்சிட்டி ஆப் அக்ரிக்கல்சர் அண்ட் டெக்னாலஜி, கான்பூர் - 208002.
* நரேந்திரதேவா யூனிவர்சிட்டி ஆப் அக்ரிக்கல்சர் அண்ட் டெக்னாலஜி, பைசாபாத் - 224229.
* அலகபாத் அக்ரிக்கல்சர் இன்ஸ்டியூட், அலகாபாத் - 211007.
* பிஸ்ரா அக்ரிக்கல்சர் யூனிவர்சிட்டி, கான்கே, ராஞ்சி - 834006.
* யூனிவர்சிட்டி ஆப் அக்ரிக்கல்சரல் சயின்ஸ், தார்வத் - 580005.
* இன்ஸ்டியூட் ஆப் அக்ரிக்கல்சரல் சயின்ஸ், பெக்குல்டி ஆப் அக்ரிக்கல்சர் அட் பிஎச்யூ, வாரணாசி - 221005.
* சரண்சிங் ஹரியானா அக்ரிக்கல்சரல் யூனிவர்சிட்டி, ஹிசார் - 125004.
* காலேஜ் ஆப் அக்ரிக்கல்சர், ராஜேந்திராநகர், ஐதராபாத் - 500030.
* யூனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சரல் சயின்ஸ், பெங்களூரு - 560065.
* கேரளா அக்ரிக்கல்சரல் யூனிவர்சிட்டி, வெள்ளானிக்கரா, திருச்சூர் - 680654.
* தமிழ்நாடு அக்ரிக்கல்சரல் யூனிவர்சிட்டி, கோயம்புத்தூர்.
* இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிக்கல்சரல் ரிசர்ச், நியூ டில்லி - 10012.
* கொங்கன் கிரைய்சி வித்யாபீத், தபோலி, ரத்னகிரி மாவட்டம் - 415712.
* டிப்பார்ட்மென்ட் ஆப் கெமிக்கல் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி அட் பஞ்சாப் யூனிவர்சிட்டி, சன்டிகார் - 160014.
