ஆற்றல் வாய்ந்த பணி வாய்ப்புகளைக் கொண்ட மண்ணியல் துறை
ஆற்றல் வாய்ந்த பணி வாய்ப்புகளைக் கொண்ட மண்ணியல் துறை
ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
அ நிறம் | அளவு
பூமி மற்றும் அதன் அமைப்பை பற்றிய அறிவியல் மண்ணியல் எனப்படும். மேலும், பூமியின் பௌதீக வரலாற்றைப் பற்றி ஆராய்வதும் மண்ணியல் எனப்படும். மண் இயற்பியல்(Geophysics), மண் வேதியியல்(Geochemistry) மற்றும் புதைபடிவங்கள்(fossils) பற்றி படிப்பது இந்த படிப்பில் அடங்கும். ஒரு மண்ணியல் அறிஞருக்கு, பகுப்பாய்வு திறன், கிரகிக்கும் திறன், கணக்கிடும் திறன் ஆகியவற்றோடு, தர்க்கரீதியான அறிவும், வெளியே சுற்றுவதில் ஆர்வமும் இருக்க வேண்டும்.
இந்த
பணியின் தன்மை:இயற்கை
பேரிடர்களை மதிப்பிடுதல், எண்ணெய், இயற்கை எரிவாயு, தாதுக்கள், நீருக்கு அடியில் இருக்கும் வளங்கள் ஆகியவற்றை கண்டறிவதில் மண்ணியல் நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேலும், பாலங்கள் கட்ட, சாலைகள், ரயில்வே பாதைகள் அமைக்க மற்றும் முக்கிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பொருத்தமான இடங்களை பரிந்துரைப்பதும் இவர்களின் முக்கியப் பணி. மேலும் ஒரு மண்ணின் தரத்தை கண்டறிவதும் இவரின் பணி.மண்ணியல்
துறையில் ஒருவர் உயர்கல்வி முடித்தவுடன் அவருக்கு பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கடல்சார்ந்த மண்ணியல் அறிஞர், தாதுப்பொருள் தொடர்பான மண்ணியல் அறிஞர், மண்சார் தாதுப்பொருள் தொடர்பான மண்ணியல் அறிஞர், புதைப்படிவங்கள் ஆய்வாளர், சூழல் தொடர்பான மண்ணியல் அறிஞர், பொறியியல் சார்ந்த மண்ணியல் அறிஞர், பெட்ரோலியம் தொடர்பான மண்ணியல் அறிஞர், சர்வேயர்கள் போன்ற பலவித வேலைவாய்ப்புகள் இருப்பதோடு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான பணிகளும் உண்டு.இத்தொழிலுக்கு
தேவைப்படும் பண்புகள்:பகுப்பாய்வு
திறன், விஞ்ஞானப்பூர்வமாக சிந்திக்கும் மனம், சிறந்த தகவல் தொடர்பு திறன், மண்ணியல் பாடத்தில் ஆழமான அறிவு போன்றவை, சில முக்கியமான தகுதிகளாகும்.இத்துறையில்
நுழைவது எப்படி:பள்ளி
மேல்நிலைப் படிப்பில், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் புள்ளியியல் ஆகிய பாடங்களைப் படித்தவர்கள், 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பில் சேரலாம். இந்த படிப்பை, இந்தியாவிலுள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்பாத்திலுள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. கூட்டு நுழைவுத்தேர்வு மூலமாக இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வேலை
வாய்ப்புகள்:இந்திய
மண்ணியல் சர்வே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷன், மினரல் மற்றும் உலோகத்தாது நிறுவனங்கள், மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகிய நிறுவனங்களில் மண்ணியல் நிபுணர்கள் மற்றும் மண்ணியல் சர்வேயர்கள் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆசிரியப் பணியிலும் ஒருவருக்கு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.இதுதொடர்பான
படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:Annamalai Uiversity - Tamilnadu
Aligarh Muslim University - UP
Andhra University - Vishakapattanam
