ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
மனையியல்(ஹோம் சயின்ஸ்) படிப்பு என்பது வீடு சம்பந்தப்பட்டது. மனையில் படிப்பை படிப்பது 2 விதங்களில் முக்கியமானது. இந்த படிப்பானது உங்களை ஒரு தொழிலுக்கு பயன்படுத்துவது முதல் வகை. உங்களின் குடும்பத்தையும், வீட்டையும் எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லித்தருவது இரண்டாம் வகை. மேலும் கிடைப்பதை வைத்து எவ்வாறு அதிகபட்ச பயன்பெறுவது என்பதையும் இந்த படிப்பு கற்றுத்தருகிறது. சுருக்கமாக சொல்வதெனில், எவ்வாறு ஒரு வெற்றிகரமான ஹோம் மேக்கராக இருப்பது என்று இந்த படிப்பு கற்றுத் தருகிறது.
மனையியல்
படிப்பு என்பது சாதாரணமான வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று மட்டும் சொல்லித்தருவதில்லை. மாறாக, எவ்வாறு நமது உடல் செயல்படுகிறது, சத்துணவு பற்றிய உண்மைகள், தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற தூய்மை, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால், அவர்களை எப்படி கவனிப்பது, உங்களின் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சேமிக்க வேண்டுமெனில், எதுபோன்ற துணிகளை உடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களும் இந்த படிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.மேலும்
, இந்த படிப்பு பெண்களுக்காக மட்டும் என்பது ஒரு தவறான எண்ணம். இன்றைய மாறிவரும் வாழ்க்கை சூழலில், ஆண்-பெண் இருவருக்குமே, குடும்பத்தின் மீது சம பொறுப்பு இருப்பதால், இந்த படிப்பு இருவருக்குமே முக்கியம். மேலும் ஒரு தனி மனிதரின் மேம்பாட்டிலும் இந்த படிப்பு மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.ஒரு
வீட்டை பராமரிப்பதின் பல்வேறு அம்சங்களை இந்த துறை விளக்குவதால், இது ஒரு கலையாகவும், அதேசமயம் ஒரு அறிவியலாகவும் இருக்கிறது. மனையியல் படிப்பில் 5 பெரிய பிரிவுகள் உள்ளன. உணவு மற்றும் சத்துணவு, குழந்தை மேம்பாடு, வீட்டு நிர்வாகம், ஆடை வகைகள், விரிவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு போன்றவையே அந்த பெரும் பிரிவுகள். மேலும் இந்த மனையியல் படிப்பில், வேதியியல், இயற்பியல், உடல் இயங்கியல், உயிரியல், சுகாதாரம், பொருளாதாரம், கிராம மேம்பாடு, குழந்தை மேம்பாடு, சமூகவியல் மற்றும் குடும்ப உறவுகள், சமூக வாழ்வு, கலை, உணவு, சத்துணவு, உடைகள் மற்றும் வீட்டு நிர்வாகம் போன்ற பல பிரிவுகளைப் பற்றி படிக்க வேண்டியிருக்கும்.இப்படிப்பிற்கான
தகுதிகள்:மனையியல்
பாடத்தை விருப்ப பாடமாக வைத்து 12 ம் வகுப்பை முடித்தவர்கள், ஹோம் சயின்ஸ் பாடத்தில், 3 வருட பி.எஸ்சி, பி.ஏ., பி.எஸ்சி. ஹானர்ஸ்(ஹோம் சயின்ஸ்), வீட்டு நிர்வாகம்/வீட்டு பொருளாதாரத்தில் பி.ஏ., நியூட்ரிஷன் படிப்பில் பி.ஏ., நியூட்ரிஷன் மற்றும் உணவு தொழில்நுட்பத்தில் பி.எஸ்சி. போன்ற பட்டப் படிப்புகள், நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.பள்ளி
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் படிப்புகளில் எடுத்த மெரிட் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறுகிறது. அதேசமயம், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ ஆகியவற்றை படிக்க, ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், இளநிலையில் ஹோம்சயின்ஸ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இத்தொழிலுக்கு
தேவைப்படும் பண்புகள்:பகுப்பாய்வு
திறன், விஞ்ஞான மதிநுட்பம், நடைமுறை அணுகல் போன்றவை முக்கியம். மேலும், அழகுணர்ச்சி, படைப்புத் திறன் மற்றும் பகுத்தறிவு ஆகியவையும் முக்கியமாக தேவைப்படும் திறன்கள்.சம்பளம்
:மனையியல்
தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்தவர்கள் ஆரம்பத்தில் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெறலாம். அனுபவம் அதிகரிக்கும்போது சம்பளமும் அதிகரிக்கும்.வேலை
வாய்ப்புகள்:மனையியல்
படித்தவர்களுக்கு சமூகப் பணிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகளில் உணவு மற்றும் சத்துணவு துறைகள், உணவு சேவைகள், ஹோட்டல்களில் உணவுப் பதப்படுத்தல் மற்றும் தயாரிப்பு துறை, உணவுப் பொருட்களின் விற்பனை மேம்பாடு, குழந்தை உணவுகள் போன்ற துறைகளில் வேலை உண்டு. மேலும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேற்கண்ட துறைகள் மட்டுமல்லாது, ஆசிரியர் தொழிலிலும் வாய்ப்பு உண்டு. மேலும், குடும்ப ஆலோசகர்களாகவும் பணியாற்றலாம். ஆடைகள் மற்றும் டெக்ஸ்டைல் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்கள், வடிவமைப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடலாம்.சத்துணவு
ஆலோசகர், ஆராய்ச்சி உதவியாளர், உணவு விஞ்ஞானி, உணவு பகுப்பாய்வாளர் போன்ற பணிகளும் இத்துறையில் உள்ளன. இத்துறை டயடீஷியன்கள், மருத்துவமனைகள், மகப்பேறு விடுதிகள், உடல் எடை குறைப்பு மையங்கள் மற்றும் பள்ளி விடுதிகளிலும் வேலைவாய்ப்பை பெறலாம். மேலும் அவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சரியான உணவுக் கட்டுப்பாட்டை திட்டமிடுகிறார்கள்.மனையியல்
ஆசிரியர்:இந்த
பாடத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள், பள்ளிகளில் மனையியல் ஆசிரியர்களாக பணியாற்றலாம். யு.ஜி.சி. தேர்வில் தேறியவர்கள் மற்றும் பிஎச்.டி. முடித்தவர்கள் கல்லூரி ஆசிரியராகவும் ஆகலாம்.வீட்டு
பொருளாதார நிபுணர்:மனையியல்
பட்டதாரிகள் பொதுவில் மனையியல் பொருளாதார நிபுணர்களாக அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் முக்கிய பணியானது, தாரிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்துவதாகும். வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட வீட்டிற்கான தயாரிப்பு பொருட்களை விளம்பரப்படுத்த மற்றும் அதற்கான வழிமுறைகளை தயாரிப்பது இவர்களின் பணி. மொத்தத்தில், சுய வேலை வாய்ப்புதான் இத்துறையில் சிறந்தது.மனையியல்
படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:Avinashilingam University for women - Tamilnadu.
Madurai Kamarajar University.
Delhi University - Delhi.
Andrapradesh Agricultural Universtiy.
Bharathiyaar University - Tamilnadu
Periyar Universtiy - Tamilnadu.
Mahatma Gandhi University - Kottayam
