ஜூன் 10, 2011 12:00 AM
ஜூன் 10, 2011 12:00 AM
அ நிறம் | அளவு
பறப்பது என்பது ஒவ்வொரு மனிதருக்குமே விருப்பமான ஒரு விஷயம்தான். மேலும் பறப்பதை பலர் பெருமையாகவும் கருதுவதால், அது சம்பந்தப்பட்ட தொழிலை தேர்ந்தெடுப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.
விமானத்
தொழிலில் சில முக்கிய வகைகள் உள்ளன. சிவில், வணிகம் மற்றும் ராணுவம் ஆகியவை அந்த பெரும் பிரிவுகள். இந்தியாவில், விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்த பலவித நடவடிக்கைகளை மத்திய விமானப் போக்குவரத்து துறை எடுத்து வருகிறது. விமானநிலைய வசதி, வான்வழி போக்குவரத்து சேவைகள், பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களின் இடப்பெயர்வு ஆகியவற்றையும் அமைச்சகம் கவனித்துக் கொள்கிறது.உள்நாட்டு
விமானப் போக்குவரத்து விதிமுறைகள், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குனரால் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. விமான நிறுவனங்கள், உள்கட்டமைப்பு துறை மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை, விமானப் போக்குவரத்து துறையின் பிரதானப் பிரிவுகள்.மேலும்
, விமானத் தொழிலின் சில முக்கிய துறைகளை பார்க்கலாம்.பொறியியல்
துறை:ஒரு
இயந்திரம் என்ற முறையில், ஒரு விமானத்தில், பல சிக்கலான தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கும். மேலும், ஒரு விமானம் பறக்கும்போது பல பயணிகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சுமந்து செல்கிறது. அதேபோல ஒரு விமானமும் அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்படுகிறது. எனவே, தொழில்நுட்ப ரீதியான முறையான பராமரிப்பு ஒரு விமானத்திற்கு மிகவும் அவசியம்.இந்த
முக்கியப் பணியை மேற்கொள்வதுதான் பொறியியல் துறை. இந்த பணிக்கு, மெக்கானிக்கல், ஏரோநாடிகல் மற்றும் எலெக்ட்ரிகல் பிரிவுகளில் படித்த பொறியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். ஏரோநாடிகல் பொறியியலில், ஏர்கிராப்ட் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் ஆகிய பிரிவுகள் உள்ளன.தேவையான
பண்புகள்:ஒரு
ஏரோநாடிகல் அல்லது மெக்கானிக்கல் பொறியாளருக்கு எப்போதுமே விழிப்புணர்வு இருக்க வேண்டும். மேலும், தர்க்கரீதியாகவும், பகுப்பாய்வு ரீதியாகவும், புதுமையாகவும் சிந்திக்க தெரிய வேண்டும்.இந்த
பொறியியல் துறையில் நுழைவது எப்படி:ஏரோநாடிகல்
பொறியாளராக ஆவதற்கு, அடிப்படையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டங்கள் இருக்க வேண்டும். நாட்டின் புகழ்பெற்ற பல பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐ.ஐ.டி -கள், இத்துறையில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகின்றன. மேலும் சில பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களும் இத்துறையில் டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.சம்பளம்
:ஒரு
உதவி பொறியாளர் ஆரம்ப நிலையில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பெறுகிறார். அவரின் அனுபவம் மற்றும் செயல்பாட்டைப் பொறுத்து அவரின் ஊதியமும் கூடுகிறது.வர்த்தகரீதியான
விமானப் போக்குவரத்து:விமானப்
பயணிகளின் வசதிக்கேற்ப பல ஏற்பாடுகளை செய்தல், டிக்கெட்டுகள், கட்டணங்களை நிர்ணயித்தல், உணவு வழங்குதல், வியாபாரத்தை மேம்படுத்தல் ஆகிய பணிகள் இத்துறையை சார்ந்தது. இந்த துறையில், அதிகாரிகள், செயலர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள், அறிவிப்பாளர்கள், விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் தேவைகளை சரிசெய்பவர் போன்ற பணிகள் கிடைக்கும்.செயலாக்கத்
துறை:பறத்தல்
தொடர்பான, விமானிகளுக்கு(பைலட்) பயிற்சி அழிப்பது உள்ளிட்ட, அனைத்து விஷயங்களுக்கும் இத்துறை பொறுப்பாகிறது. இத்துறையின் முக்கிய செயலதிகாரிகள் - விமான பொறியாளர்(Flight engineer), விமான தொழில்நுட்ப வல்லுநர்(aircraft technician), விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் தேவைகளை சரிசெய்பவர், பைலட் அதிகாரி போன்றவர்கள். விமானப் பொறியாளர் என்பவர், ஒரு விமானத்தின் சீரான மற்றும் பாதுகாப்பான இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார். இந்த பணியில் சேர வேண்டுமெனில், ஏரோநாடிக்ஸ், மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரிகல் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.விமான
தொழில்நுட்ப வல்லுநர் என்பவர், விமானத்தின் என்ஜின் மற்றும் அது தொடர்பான விஷயங்களை பராமரிக்கும் பணியை செய்கிறார். இந்த பணியில் சேர, பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, Aircraft Maintenance Engineering படிப்பில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வணிகரீதியான
பைலட்டின் பணி:ஒரு
பைலட் என்பவர் விமானப் பயணத்தின் தலைவர். அவர்தான், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்கள் மற்றும் அந்த விமானத்தின் பாதுகாப்பிற்கு முழுமுதல் பொறுப்பு. தனியார் துறை, பொதுத்துறை மற்றும் விமானப் படையில் பல பணி வாய்ப்புகள் பைலட்டுகளுக்கு உள்ளன. பைலட்டுகளுக்கான சம்பளம் கவர்ச்சிகரமானது. ஆரம்பத்தில் மாதம் ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை கிடைக்கும். அதேசமயம் அனுபவம் வாய்ந்த பைலட்டுகள் ரூ.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பெறுவார்கள்.உடல்
தகுதி:பறப்பதை
தங்களின் தொழிலாக மேற்கொள்ள விரும்புபவர் அனைவரும், இதற்கான மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்ற 2 நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிடமிருந்து அந்த சான்றிதழைப் பெறுவது கட்டாயம். ஏர்போர்ஸ் மத்திய மருத்துவ அமைப்பு(சி.எம்.இ) - டெல்லி, விமானத்துறை மருத்துவ நிறுவனம்(ஐ.ஏ.எம்) - பெங்களூர்.வணிகரீதியான
பைலட் ஆவது எப்படி:இந்தியாவில்
, இதற்கான உரிமத்தை(லைசன்ஸ்) பெறுவதற்கு முன்பாக, ஒருவர், மாணவர் பைலட் உரிமத்தைப்(எஸ்.பி.எல்) பெற வேண்டும். இதற்கு நீங்கள், பறத்தல் விதிமுறை, விமானப் போக்குவரத்திற்கான வானிலை, விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் வாய்மொழித் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தேறியிருந்து, உங்களுக்கு 16 வயது நிரம்பியிருந்தால், பாதுகாப்பு கிளீயரன்ஸ் மற்றும் வங்கி உத்திரவாதம் பெற்றபிறகு, வாய்மொழித் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.இந்த
தேர்வானது, அரசு ஸ்பான்சர் செய்யும் ப்ளையிங் கிளப்புகளில், ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள்கிழமையும் நடக்கும். இதற்கு தகுதி பெறுவதற்கும் மருத்துவ பரிசோதனை முக்கியம். இதனைப் பற்றிய விரிவான தகவல்கள் மேற்கண்ட கிளப்புகளில் கிடைக்கும்.தனியார்
பைலட் உரிமம் பெறுவதற்கு, மாணவர் பைலட் லைசன்ஸ்(எஸ்.பி.எல்) பெறுவது கட்டாயம். நீங்கள் பறப்பதற்கு அனுமதி பெறும் முன்பாக, ஒரு பறத்தல் பயிற்சியாளரால், உங்களுக்கு ஆரம்பகட்ட விமானப் பயிற்சி(Dual flight Training ) வழங்கப்படும். இதன்பிறகு, தனி விமானப் பயிற்சி கிடைக்கும். தனியார் பைலட் லைசன்ஸ் பெறுவதற்கான பயிற்சியில் நீங்கள் கலந்துகொள்வதற்கு முன்பாக, நீங்கள் மொத்தம் 60 மணிநேர பறத்தல் பயிற்சியை முடித்திருக்க வேண்டும்(5 மணிநேரம் நாடுகளை தாண்டி பறத்தல், 20 மணிநேரம் தனியாக பறத்தல்).மேலும்
எழுத்து தேர்வில், பறத்தல் விதிமுறைகள், விமானப் போக்குவரத்துக்கான வானிலை, விமானப் பயணம், விமான என்ஜின்கள் போன்றவை குறித்து கேட்கப்படும். இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 17 மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் மேற்கூறிய 2 முக்கிய நிறுவனங்களில் மருத்துவ தகுதி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.வணிகரீதியான
பைலட் உரிமம்(லைசன்ஸ்):இயற்பியல்
மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்ட மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மட்டும் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் தனியார் பைலட் உரிமமும்(பி.பி.எல்) இருக்க வேண்டும். 250 மணி நேரங்கள்(பி.பி.எல் -க்கான 60 மணிநேர பறத்தல்) மற்றும் 190 மணி நேரங்கள் பறத்தல் பயிற்சி அனுபவம், வணிகரீதியான பைலட் உரிமம் பெற அவசியம். உடல்தகுதியும் முக்கியம். மேலும், பறத்தல் விதிமுறைகள், விமானப் போக்குவரத்திற்கான வானிலை, விமானப் போக்குவரத்து, தொழில்நுட்பம், திட்டமிடுதல் போன்ற விஷயங்களில் தேர்வெழுத வேண்டும்.மொத்தம்
250 மணி நேர பறத்தல் தகுதியில், 150 மணி நேரம் தனியாகவும், 25 மணிநேரம் நாடுகளைக் கடந்தும், 10 மணிநேர instrument பறத்தலும், 5 மணிநேர இரவு பறத்தலும் இருக்க வேண்டும்.வணிகரீதியான
ஹெலிகாப்டர் பைலட் உரிமம்(CHPL):இதைப்
பெறுவதற்கு, உங்களிடம் தனியார் ஹெலிகாப்டர் பைலட் உரிமம்(PHPL) இருக்க வேண்டும். பறத்தல் தொடர்பான பாடங்களில் எழுத்து தேர்வு மற்றும் 40 மணிநேர பறத்தல் பயிற்சி போன்றவை அவசியம். மேலும் இந்த உரிமம் பெரும் முன்பாக, 60 மணிநேர பறத்தல் பயிற்சியை முடித்திருப்பதோடு, எழுத்து தேர்விலும் தேறியிருக்க வேண்டும். விதிமுறைகளுக்குட்பட்ட உடல் தகுதியும் இருக்க வேண்டும்.தேவைப்படும்
குணாதிசயங்கள்:சவால்களை
சந்திப்பதற்கான ஆர்வம், பல மணிநேரங்கள் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன், உடல் தகுதி, விழிப்புணர்வு, விரைவாக முடிவெடுக்கும் திறன் போன்றவை இப்பணிக்கு மிகவும் தேவையான தகுதிகளாகும்.சம்பளம்
:ஒரு
துணை பைலட்டாக நீங்கள் மாதம் ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பெறுவீர்கள். அதேசமயம் சீனியர்கள் ரூ.2 முதல் 3 லட்சம் வரை பெறுவார்கள். மேலும், இவர்களின் சம்பளமானது ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேலும் செல்லும்.
