தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சுற்றுசூழல் அறிவியல் துறை பணிகள்

சுற்றுசூழல் அறிவியல் துறை பணிகள்

சுற்றுசூழல் அறிவியல் துறை பணிகள்


ஜூன் 10, 2011 12:00 AM

ஜூன் 10, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூன் 10, 2011 12:00 AM ஜூன் 10, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது இன்று, உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை. சுற்றுசூழல் அறிவியல் என்பது, சுற்றுசூழலுடன் தொடர்புடைய பல அம்சங்களைப் பற்றி ஆராய்வதாகும். இது இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கலந்த ஒரு துறையாகும். இந்த படிப்பானது முக்கியமாக, நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுவதற்கான காரணங்கள், அதன் விளைவுகள், அதை கட்டுப்படுத்தும் வழிகள் மற்றும் தாவரங்கள் - விலங்குகள் பற்றி ஆராய்வதாகும்.

இயற்கை வளங்கள் வேகமாக அழிந்து, சுற்றுசூழல் மிகவும் மோசமாகி வரும் நிலையில் அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உடனடியாக ஏற்படுத்த வேண்டியுள்ளது. இன்றைய நிலையில், ஆரம்ப பள்ளி அளவிலேயே சுற்றுசூழல் தொடர்பான பாடங்கள் இருப்பதால், சிறுவயதிலேயே மாணவர்களுக்கு உலக பருவநிலை மாறுபாடு, ஓசோன் படலத்திலுள்ள ஓட்டை, காடுகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுகிறது. சுற்றுசூழல் நிபுணர்கள், எகாலஜி, ஜியாலஜி, சமூக அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருகிறார்கள்.

இந்திய அரசின் முயற்சிகள்:

சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசானது, வனம் மற்றும் சுற்றுசூழல் துறை என்று ஒரு தனி துறையையே உருவாக்கியுள்ளது. அதன் சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு சுற்றுப்புற சூழல் தொடர்பான நடவடிக்கைகளான, UNEP, SACEP, ICIMOD, UNCED போன்ற திட்டங்களில், இந்தியா நலம் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. CSD மற்றும் GEF போன்ற பல நாடுகள் இணைந்த அமைப்புகளின் விவகாரத்திலும், மற்றும் ESCAP, SAARC போன்ற பிராந்திய அமைப்புகளின் சுற்றுசூழல் விவகாரங்களிலும் முக்கிய பணிகளை மேற்கொள்கிறது.

நாட்டிலுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள், காடுகள் மற்றும் காட்டு வாழ்க்கை, சுற்றுப்புற சீர்கேட்டை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல், காடு வளர்ப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுதல், சூழ்நிலை பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலன் போன்றவற்றை பாதுகாத்தல் மற்றும் சர்வே எடுத்தல் போன்றவை, இந்த அமைச்சகத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் பணிகளாகும்.

இத்துறையில் நுழைவது எப்படி:

இத்துறையில், இளநிலை அளவிலான பட்டப்படிப்புகள் இந்தியாவில் பரவலாக வழங்கப்படுகின்றன. அந்த படிப்புகளில் சேர்வதற்கான தகுதிகள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகின்றன. ஆனால், இந்தவகை படிப்பில் சேர்வதற்கு, பள்ளி படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/கணிதம் போன்ற பாடங்களை முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பிரிவுகளில் பள்ளி படிப்பை முடித்த பிறகு, பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, வன உயிரினங்கள் பற்றிய படிப்புகள் போன்ற படிப்புகளை இளநிலையில் படித்து, முதுநிலையில், சுற்றுசூழல் அறிவியல், பயோகெமிஸ்ட்ரி, டாக்சிகாலஜி(நச்சுப் பொருட்கள் பற்றிய படிப்பு), மைக்ரோபயாலஜி, மரைன் பயாலஜி மற்றும் கடல்சார் அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கலாம்.

இதைத்தவிர, பள்ளி படிப்பை முடித்த பிறகு(இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களை படித்திருந்தால்), கெமிக்கல், சுற்றுசூழல், மெக்கானிக்கல், சிவில், சுரங்கம் ஆகிய பிரிவுகளில் பொறியியல் படித்து சுற்றுசூழல் பொறியாளராக பணியாற்றலாம். பள்ளி படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படித்திருந்தால், அவர்கள், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு ஜியாலஜி மற்றும் ஹைட்ரோஜியாலஜி போன்ற படிப்புகளை மேற்கொள்ளலாம்.

மேலும், எம்.எஸ்சி. படிப்புகளில் சேர, அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலையிலிருந்து பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். பலவிதமான படிப்புகளுக்கு, நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சுற்றுசூழல் விஞ்ஞானி:

சுற்றுசூழல் விஞ்ஞானிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி அளவிடுதல் மற்றும் அத்தகைய தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்கிறார். சுற்றுசூழல் அதிகாரிகளும், இதுதொடர்பான பணிகளை மேற்கொள்கிறார்கள். சுற்றுசூழல் விஞ்ஞானிகள், தங்களின் நோக்கத்திற்காக தயாரிப்பு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார்கள்.

மேலும், கதிர்வீச்சு விபத்துக்கள், நச்சு வாயுக்கள் வெளியாதல் போன்ற சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விபத்துகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதும் இவரின் பணி. இவைத்தவிர, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட பலவித பணிகளால் உண்டாகும் சூழல் மாறுபாடுகளை கண்காணித்தல் பணியையும் இவர் மேற்கொள்கிறார்.

சுற்றுசூழல் விஞ்ஞானிகள், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, விவசாயத்தின் தாக்கத்தினை குறைப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்குதல், சுற்றுசூழல் தொடர்பான தொழில்துறை மற்றும் இதர மேம்பாடுகளை பயன்படுத்த வழிவகை செய்கின்றனர். தனிப்பட்ட திட்ட தேவைகள் தொடர்பாக, பிற தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைப் போல, அலுவலகத்திலும், அதற்கு வெளியிலும் பணியாற்றுகின்றனர்.

இப்பணிக்கு தேவையான பண்புகள்:

சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலை, மனித இனத்தின் நன்மை, காடுகள் மற்றும் எதிர்கால தலைமுறையினரின் நல்வாழ்வு குறித்த ஆர்வம் போன்றவை இருக்க வேண்டும். மேலும், பிரச்சினைகளை தீர்ப்பதில் தர்க்கரீதியான அணுகுமுறை, பரவலான மக்களுடன் தயக்கமின்றி கலந்துரையாடும் திறன் மற்றும் குழுவாக இணைந்து பணியாற்றும் தன்மை போன்றவை இருக்க வேண்டும்.

இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

Bharathidasan University - Trichy

Bharathiyaar University - Coimbatore

Patna University - Patna

University of Delhi - Delhi

Berhampur University - Berhampur

Utkal University - Bhubaneshwar

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us