ஜூன் 23, 2011 12:00 AM
ஜூன் 23, 2011 12:00 AM
ஏராளமான மாணவர்களால் விரும்பப்படும் பொறியியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் ஐ.ஐ.டி-ஜே.இ.இ. அல்லது ஏ.ஐ.இ.இ.இ. தேர்வுகளுக்கு தயாராவது ஒரு கடினமான பணி என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தகைய தேர்வுகளுக்கு தயாராவதற்கு, பொதுவாக, பள்ளிப் படிப்பின் கடைசி 2 ஆண்டுகளை(11 மற்றும் 12 ம் வகுப்புகள் படிக்கும் காலம்) மாணவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
இத்தகைய
தேர்வுகளில் வெற்றிபெற, சுய படிப்பிற்கு(self study) அதிக நேரம் ஒதுக்குவதும், சிறந்த முறையில் வியூகம் வகுத்துக் கொள்வதுமே முக்கிய தேவைகள். திறன்வாய்ந்த ஆசிரியர்கள் உங்களுக்கு உதவி செய்தாலும், நீங்கள் செய்யவேண்டிய கடின முயற்சியை அவர்கள் செய்ய முடியாது. சுயமாக அமர்ந்து படிக்கும் மாணவர்கள், தங்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்திசெய்து கொள்ள வேண்டும். ஆனால் பல மாணவர்கள், இதையெல்லாம் போய் கேட்பதா என்று கூச்சப்பட்டு, சில முக்கிய விஷயங்களை கோட்டைவிட்டு விடுகிறார்கள்.எனவே
, மேற்கூறிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் முறை பற்றி சற்று விரிவாக அலசலாம்.தேர்வுக்கு
1 மாதம் முன்பு:இந்த
நேரம் ஒரு படபடப்பான நேரம் மற்றும் முக்கியமான நேரம். இதுவரை தேர்வுக்கு தயாரானதில், என்ன மாதிரியான தவறுகளை செய்துள்ளோம் என்று திரும்பி பார்த்தல் மற்றும் எந்த பாடம் மற்றும் தலைப்பில் நாம் தடுமாறுகிறோம் என்பதைக் கண்டறிந்து அந்த குறைகளை களைய வேண்டும். கணக்கிடுதலில் தவறு செய்வதை சரிசெய்தல், மதிப்பீடுகளை நினைவில் கொண்டு வருவது போன்ற அம்சங்களை தயார்செய்து கொள்ள வேண்டும்.இந்த
தேர்வுகள் பொதுவில் கடினமானவை. ஏனெனில், 3 மணி நேரம் கொண்ட 2 தேர்வுகளை அடுத்தடுத்து எழுத வேண்டும். எனவே, இத்தகைய கடினமான சூழலுக்கு பழக்கப்பட, அதேபோன்ற மாதிரி தேர்வுகளை வீட்டில் எழுதிப் பார்த்து பழக வேண்டும். மேலும், கடந்த வருட தேர்வுகளின் கேள்வி தாள்களையும் வாங்கி பார்க்க வேண்டும். இதன்மூலம், உங்களுக்கு மன அழுத்தம் குறைந்து, ஒரு தெளிவு கிடைக்கும்.இந்த
நேரத்தில், வேறு பல தேவையற்ற பிரச்சினைகளை இழுத்துக்கொள்ள கூடாது. தேர்வில் மட்டுமே உங்களின் கவனம் இருக்க வேண்டும். ரிலாக்சாக இருக்க வேண்டும், போதுமான அளவு தூங்க வேண்டும். இதைத்தவிர, உங்களின் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் மற்றும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.ஒரு
பெரிய கேள்விக்கு விடையளிக்க எவ்வளவு நேரம் ஆகிறது மற்றும் ஒரு சிறிய கேள்விக்கு விடையளிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை மாதிரி சோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், தேர்வில் எந்தெந்த கேள்விகளை எப்போது மற்றும் எப்படி எழுதலாம் என்று உங்களால் வியூகம் வகுக்க முடியும்.தேர்வுக்கு
1 வாரம் முன்பு:நேரம்
மிகவும் குறுகியதாக இருக்கிறது. மாதிரி தேர்வு வைத்தல், ரிவிசன் செய்தல், ஒவ்வொரு பாடம் மற்றும் தலைப்பு வாரியாக நமது பலம் மற்றும் பலவீனத்தை சோதித்து, அனைத்தையுமே படித்து முடித்திருக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் எதையும் புதிதாக படிப்பதை பற்றி மாணவர்கள் நினைத்துக்கூட பார்க்கலாகாது. முக்கியமான பார்முலா நடைமுறைகளை திருப்பி பார்க்கும் நேரமிது. பலம் மற்றும் பலவீனங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.உடல்நிலையில்
கவனமுடன் இருக்க வேண்டும். தேர்வுக்கு 1 வாரம் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில், 2 அல்லது 3 நாட்கள் உடல்நலம் பாதித்தாலும் நிலைமை சிக்கலாகிவிடும். எனவே இவ்விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தேர்வுக்கு
தயாராகும் 2 வருட காலத்தில் கட்டாயம் செய்ய வேண்டியவை:* ஒரு நாளைக்கு என்ன இடைஞ்சல் வந்தாலும், கட்டாயம் 5 முதல் 6 மணி நேரங்கள் படிக்க வேண்டும்.
* உங்களின் சந்தேகங்களை மொத்தமாக தேக்கி வைக்காமல், அவ்வப்போது தீர்த்துக்கொள்ள வேண்டும்.
* உங்களின் வீட்டுப் பாடங்களை, கூடுதல் நேரத்தில், பள்ளியிலேயே செய்து முடித்து விடவும்.
* தொடர்புடைய புத்தகங்களை படித்தல் வேண்டும்.
* படுக்கையில் படுத்துக் கொண்டு, வெறுமனே கேள்விகளை வாசிப்பதைவிட, அந்த கேள்விகளுக்கு பதில் எழுதிப் பார்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* நீங்கள் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க விரும்பினால், உங்களது வீட்டின் அருகிலேயே ஒரு நல்ல பயிற்சியாளரை தேர்வு செய்தல் சிறந்தது. ஏனெனில் அப்போதுதான் அலைச்சல் மிச்சமாகும்.
* ஐ.ஐ.டி. வலைதளத்திலிருந்து பாடத்திட்டத்தை தெரிந்துகொண்டு, தொடர்புடைய விஷயங்களை மட்டுமே படிக்க வேண்டும்.
* ஒரு பாடத்தை பல பகுதிகளாக பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நேரம் ஒதுக்கவும்.
* பள்ளி இறுதித் தேர்வுகளுக்கான பாடங்களை 6 மாதங்களுக்கு முன்னதாகவே முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த தேர்வுகளை நெருக்கடி இல்லாமல் எதிர்கொள்ள முடியும்.
* மாதிரி தேர்வுகளை எழுதி, உங்களின் வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றை சோதனை செய்து கொள்ளவும்.
* ஒவ்வொரு மாதிரி தேர்வை முடித்தவுடன், உங்களின் தரத்தை சோதித்துக்கொள்ளவும்.
* ஒவ்வொரு பாடத்திலும் உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அதை களைய வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும் 2 வருட காலத்தில் கட்டாயம் செய்யக்கூடாதவை:
* உங்களின் சந்தேகங்களை சேகரித்து வைக்க வேண்டாம்.
* ஒரே ஒரு பாடத்திற்கு பல புத்தகங்களை ரெபர் செய்ய வேண்டாம்.
* தொடர்பற்ற விஷயங்களை படித்துக் குழப்பிக் கொள்வதோடு, உங்களின் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்.
* ஒற்றை தலைப்பிற்காக அதிக காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
* நேரத்தை வரையறுத்துக் கொள்ளாமல் எந்த தேர்வையும் எழுதக் கூடாது.
* அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல் மற்றும் இணையத்தில் அதிகநேரத்தை செலவிடக்கூடாது.
* உங்களின் பள்ளி தேர்வுகளை எழுதாமல் விடக்கூடாது.
