ஜூலை 25, 2024 12:00 AM
ஜூலை 25, 2024 12:00 AM

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பே, 'செர்ப்' எனும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம். 
அறிமுகம்
கடந்த 2008ம் ஆண்டில் இயற்றப்பட்ட பார்லிமென்ட் சட்டத்தின் வாயிலாக துவக்கப்பட்ட 'செர்ப்', அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகிறது. நவீன ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிப்பதன் வாயிலாக, திறமையாளர்களை வளர்ப்பதையும், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
குறிக்கோள்கள்:
* சமூகத்தின் தேவைகளுடன் இணைக்கும் நிதியுதவி திட்டங்களை உருவாக்குதல் 
* சமூகத்தின் பலவீனமான மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுவருவதற்கான திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் பலப்படுத்துதல்
* பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெண் விஞ்ஞானிகளின் மேம்படுத்தப்பட்ட மற்றும் சமமான பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதற்காக பொருத்தமான திட்டங்கள் செயல்படுவதை உறுதிசெய்தல் 
* கல்லூரிகள் மற்றும் வளம் குறைந்த பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்களை ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளுடன் இணைக்கும் திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் வலுப்படுத்துதல். அதன் வாயிலாக தரமான அறிவியலின் தடம் விரிவடைய செய்தல்
* உலகளாவிய இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகள் வாயிலாக, இந்தியாவில் தரமான அறிவியலின் வளர்ச்சியை உறுதி செய்தல் 
உதவித்தொகைகள்:
ஸ்டார்ட்-அப் ஆராய்ச்சி மானியம்: 
புதுமையான ஆராய்ச்சி திட்டங்களை ஆதரிக்கும் வகையில் நிதியை வழங்குவதோடு, எதிர்கால ஆராய்ச்சி முயற்சிகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது.
ஆரம்பகால தொழில் ஆராய்ச்சி விருது:
 இளம் விஞ்ஞானிகளை இலக்காகக் கொண்டுள்ள இவ்விருது, உயர்தர ஆராய்ச்சியை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது.
நேஷனல் போஸ்ட்-டாக்டோரல் பெல்லோஷிப்: 
இந்தியாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதை ஆதரிக்கும் இத்திட்டம், இளம் ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவதற்கும், மதிப்புமிக்க ஆராய்ச்சி அனுபவத்தை பெறுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோர் ஆராய்ச்சி மானியம்: 
அறிவியல் மற்றும் பொறியியலின் பல்வேறு துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. 
தொழில்துறை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: 
கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையிலான ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறது. 
மேலும், ஜே.சி. போஸ் நேஷனல் பெல்லோஷிப், அப்துல் கலாம் டின் பெல்லோஷிப், ராமானுஜன் பெல்லோஷிப், வுமன் எக்ஸ்லென்ஸ் ஆராய்ச்சி மானியம், டெக்னாலஜி டிரான்ஸ்லேஷன் விருது, ஆராய்ச்சி விஞ்ஞானிகள் திட்டம், சயின்ஸ் அண்டு டெக்னாலஜி ஆராய்ச்சி விருது, பவர் பெல்லோஷிப், பிரதம மந்திரி டாக்டோர ரிசர்ச் பெல்லோஷிப், ஓவர்சீஸ் விசிட்டிங் டாக்டோரல் பெல்லோஷிப் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவியும், விருதும் வழங்கப்படுகின்றன. 
விபரங்களுக்கு: 
https://serb.gov.in/

