தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீங்கள் சட்டக் கல்லூரி மாணவரா?...

நீங்கள் சட்டக் கல்லூரி மாணவரா?...

நீங்கள் சட்டக் கல்லூரி மாணவரா?...


செப் 02, 2013 12:00 AM

செப் 02, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

செப் 02, 2013 12:00 AM செப் 02, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உங்களுக்கு விரும்பிய சட்டக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால், ஒருமுறை மூச்சை, நீளமாக இழுத்துவிட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், எதிர்காலத்தில், உண்ணுதல், தூங்குதல் உள்ளிட்ட உங்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். சட்டக் கல்வி நிறுவனத்தில் சேர்வதென்பது ஒரு பாராட்டத்தக்க விஷயம் என்றாலும், அதற்காக, நாட்டின் சட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களைப் பற்றியும் சிந்தித்து, கவலைப்படப்போவது நாம்தான் என்பது அர்த்தமாகாது.

வேலை வழங்குநரின் எதிர்பார்ப்பு

ஒரு சட்டப் பட்டதாரி வேலைக்கு விண்ணப்பிக்கையில், அவரின் கல்வி நிறுவன செயல்பாடோடு சேர்த்து, அவரின் கல்வி சாராத துணை நடவடிக்கைகளும் சேர்த்துதான் கணக்கில் கொள்ளப்படும். சில மாணவர்கள், படிப்பில் சுமாராக இருப்பார்கள். ஆனால், தங்களின் கல்லூரி நாட்களில், மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகள், நடன மற்றும் பேச்சு போட்டிகள் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வேலை வாய்ப்பு நிறுவனங்களை கவர்ந்து விடுகின்றனர்.

மாதிரி நீதிமன்ற பயிற்சி

சட்டம் தொடர்பான கல்லூரி நடவடிக்கைகள், முக்கியமாக, மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகள், அதன் மூலமாக கிடைக்கும் விவாத பயிற்சிகள், ஒரு சட்ட மாணவரின் கல்லூரி வாழ்க்கையில் பெரிய அனுபவத்தைக் கொடுப்பதாக உள்ளன. இதன்மூலம், வரைவு செய்தல், விரிவாக்குதல், தங்களின் எதிர்வாதிக்கு எதிராக சிறப்பாக விவாதம் செய்தல் போன்ற திறன்களைப் பெறுகிறார்கள்.

மாதிரி நீதிமன்றங்களின் விவாதப் பயிற்சியின் மூலமாக, நடைமுறை அனுபவம், நிஜ வாழ்க்கைப் பயன்பாட்டு திறனை பெறுதல் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

விவாதம் செய்தல்

கல்லூரி நிலையிலான விவாதப் பயிற்சி என்பது பள்ளிகளைப் போன்றதல்ல. கல்லூரி நிலையில், நீங்கள் ஒரு வரன்முறைப்படுத்தப்பட்ட பேச்சாளராக உருமாற வேண்டும். தெளிவான கருத்து மற்றும் தேவைக்கேற்ப உங்களின் விவாதத்தை மாற்றும் திறன் வேண்டும். நாடாளுமன்ற விவாதத்தை எடுத்துக்கொண்டால், அதில் நகைச்சுவை மற்றும் புத்தாக்க அம்சங்கள் நிறைந்திருக்கும்.

உங்களால், வேகமாகவும், அதேசமயம் துல்லியமாகவும் பேச முடிந்தால், உங்களின் எதிர்வாதி செயலற்று போய்விடுவார். உங்களின் அதிரடி தாக்குதலில், என்ன செய்வதென்றே தெரியாமல், அவர்கள் திகைத்துப் போவார்கள். NALSAR PD competition and NUJS PD competition போன்ற விவாத போட்டிகளில், பெரியளவிலான பரிசுகளும், அனுபவங்களும் கிடைக்கின்றன.

மாதிரி ஐ.நா. சபை

மாதிரி ஐ.நா. சபை விவாதப் பயிற்சி என்பது மிகவும் சிறந்த அனுபவம் தரும் ஒன்றாகும். ஏனெனில், அந்த அவையில், பல நாட்டு பிரதிநிதிகளும், தங்களின் கருத்தை முன்வைத்து, வெற்றிபெற வைக்க முயலும் ஒரு இடம். சர்வதேச அரசியல் விவகாரங்கள் மற்றும் சட்ட விதிகள் அலசப்படும் இடம்.

இதன்மூலம், சர்வதேச சட்ட அறிவு மற்றும் புத்திசாலித்தனமான விவாதம் தொடர்பான அனுபவத்தைப் பெற முடியும். மாதிரி ஐ.நா. சபை விவாத மன்றங்களில் பிரபலமானவை, Harvard MUN, Indian international MUN and Christ university MUN ஆகியவையாகும்.

பேப்பர் பிரசன்டேஷன்

பேச்சுக் கலை உங்களுக்கு ஒத்துவராது என்று நீங்கள் நினைத்தால், ஒரு ஆராய்ச்சி பேப்பர் எழுதி, அதை வெளியீட்டிற்கு அனுப்பலாம் அல்லது மாநாடுகளின் போது அதை சமர்ப்பணம் செய்யலாம். ஆண்டு முழுவதும், ஆராய்ச்சி பேப்பர்களுக்கு பல அழைப்புகள் வருகின்றன. மேலும், ஜர்னல்களுக்கு ஒரு சட்ட மாணவர் தனது எழுத்துப் பணியை அனுப்பலாம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற சட்டக் கல்லூரிகள் போன்றவை, law reviews மற்றும் மாநாடுகள் போன்றவைகளை நடத்துகின்றன. இவற்றின் மூலம் சட்ட மாணவர்கள் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். மேலும், மாநாடுகளில், நல்ல power point presentation மூலம், பார்வையாளர்களை கவர முடியும்.

மாநாடுகள்

பெரிய கல்வி நிறுவனங்கள், அந்தந்த காலகட்டத்தின் முக்கிய சட்ட விவாதங்கள் பற்றிய செமினார்கள், மாநாடுகள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவற்றின் கலந்துகொள்வதின் மூலமாக, ஒரு மாணவர் அதிகம் கற்றுக்கொள்வதோடு, அவரின் நெட்வொர்க்கும் விரிவடைகிறது.

சட்டம் என்பது, அதிகம் பொது விஷயங்கள் சம்பந்தப்பட்டது. எனவே, மேற்கூறிய நிகழ்வுகளில் கலந்துகொள்கையில், ஒரே சிந்தனையுடைய பல தனி மனிதர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், உங்களுக்கான ஒரு புதிய உலகமும் திறக்கப்படும்.

வகுப்பறை சாராத நடவடிக்கைகள்

பல்வேறு திறமைகள் நிரம்பிய ஒருவருக்கு, இந்த உலகம் தரும் மரியாதையே தனி. நீங்கள் சட்டக் கல்லூரியில் ஒரு மாணவராக சேர்ந்துவிட்டால், உடனே, உங்களின் மற்ற செயல்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, வகுப்பறை பாடங்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.

ஒரு மூலையில், பெஞ்சில் வெறுமனே அமர்ந்துகொண்டு வகுப்பறை பாடங்களை மட்டுமே கவனிக்கும் சட்ட மாணவருக்கு, எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும். கவிதை, கட்டுரை, நடனம், பாடல், கருத்தரங்கம், மாதிரி நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறான நடவடிக்கைகளில் பங்குகொண்டு, தன் திறனை வளர்த்துக்கொண்டு மற்றும் நிரூபித்து பயன்பெறும் மாணவர்களின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பானதாக அமையும்.

நேர மேலாண்மை

உங்களுக்கு கிடைக்கும் கல்லூரி படிப்பு, உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். மனித வாழ்வில் கல்லூரி நாட்களை, சொர்க்கம் என்று சொன்னாலும் அது மிகையாகாது. நீங்கள் இதுவரை கண்டிராத பல புது பயனுள்ள அனுபவங்களை கல்லூரி வாழ்க்கை உங்களுக்கு வாரி வழங்கும்.

அதுவும், பிரபலமான மற்றும் பெயர்பெற்ற கல்லூரிகளில் நீங்கள் படித்தால் சொல்லவே தேவையில்லை. எனவே, வேறு தேவையற்ற விஷயங்களில் மனதை அலையவிடாமல், அந்த குறிப்பிட்ட வருடங்களில் என்னென்ன திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அவற்றை மேம்படுத்திக்கொண்டு, எதிர்காலத்தை கவலையின்றி எதிர்கொள்ளவும். நாம் வீணாக்கும் நேரம், நம் எதிர்காலத்தையே காவு வாங்கிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us