sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சி.ஏ.டி., தேர்வில் குறைவான மதிப்பெண்ணா? - கவலை வேண்டாம்

/

சி.ஏ.டி., தேர்வில் குறைவான மதிப்பெண்ணா? - கவலை வேண்டாம்

சி.ஏ.டி., தேர்வில் குறைவான மதிப்பெண்ணா? - கவலை வேண்டாம்

சி.ஏ.டி., தேர்வில் குறைவான மதிப்பெண்ணா? - கவலை வேண்டாம்


மார் 05, 2014 12:00 AM

மார் 05, 2014 12:00 AM

Google News

மார் 05, 2014 12:00 AM மார் 05, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.ஏ.டி., எக்ஸ்.ஏ.டி., ஐ.ஐ.எப்.டி., மற்றும் எஸ்.என்.ஏ.பி., ஆகிய மேலாண்மை நுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர், மாணவர்களின் கவனமெல்லாம், தங்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், எந்தெந்த வணிகப் பள்ளிகளில் இடம் கிடைக்கும் என்பதில்தான் இருக்கும்.

CAT தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போனவர்கள், தாங்கள் நினைத்த வணிகப் பள்ளியில் இடம் பிடிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருப்பர். எனவே, அவர்கள் ஒரு நல்ல வணிகப் பள்ளியில் எப்படி இடம் பிடிப்பது என்பதைப் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.

நமது விருப்பங்களை ஆராய்தல்

எம்.பி.ஏ., தேர்வு முடிவுகள் உங்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். அதேசமயம், முக்கிய வணிகப் பள்ளிகளிலிருந்து உங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லையே என்று நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. ஏனெனில், அதுபோன்ற வணிகப் பள்ளிகள், CAT, XAT முதலான தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களுக்கு மிகவும் குறைந்தளவு வெயிட்டேஜ் மதிப்பெண்கள்தான் அளிக்கின்றன.

அவை, 50 முதல் 60 அல்லது அதற்கும் மேலான விகிதாச்சார மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை shortlist செய்கின்றன. எனவே, உங்களின் தற்போதைய CAT மதிப்பெண்களுடன், உங்களுக்கான விருப்ப வணிகப் பள்ளியை தேட வேண்டும்.

வணிகப் பள்ளிகள், ஒரு மாணவரின் அகடமிக் செயல்பாடுகள், திறன்சார் நடவடிக்கைகள், மென்திறன்கள், ஆளுமை, மனப்பாங்கு மற்றும் சமூக நடத்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில் எடுத்தே, அவருக்கான இடத்தை உறுதி செய்கின்றன. பல வணிகப் பள்ளிகளில், CAT அல்லது XAT மதிப்பெண்கள், 20 முதல் 30 சதவீத வெயிட்டேஜ் மட்டுமே பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த மதிப்பெண் என்பது தடையல்ல...

CAT போன்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் ஒரு முக்கியமான அம்சம் என்றாலும், மேலே சொன்னது போன்று வேறு பல அம்சங்களும் மாணவர் சேர்க்கை செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றுக்கு அதிக வெயிட்டேஜ் வழங்கப்படுகின்றன. எனவே, குறைந்த CAT மதிப்பெண் பெற்றவர்கள், தங்களுக்கு நல்ல வணிகப் பள்ளி கிடைக்காதோ என்று கவலைப்படத் தேவையில்லை.

எனவே, உங்களின் தற்போதைய CAT மதிப்பெண்கள் அடிப்படையில், உங்களை shortlist செய்யும் வணிகப் பள்ளிகளை நீங்கள் கண்டறிந்தால், அவற்றுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வேறு தேர்வுகள்

CAT தேர்வு தவிர, தேசிய மற்றும் மாநில அளவிலான இதர எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளும் உள்ளன. அவற்றை குறித்தும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அதுபோன்ற தேர்வுகளுக்கும் தயாராகி, உங்களின் வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us