தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/‘மரைன் பயாலஜி’

‘மரைன் பயாலஜி’

‘மரைன் பயாலஜி’


பிப் 03, 2016 12:00 AM

பிப் 03, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 03, 2016 12:00 AM பிப் 03, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகளவில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், எரிசக்தி ஆதாரங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கு, கடல்களை நாம் பெருமளவு சார்ந்திருப்பதை நன்கு அறிவோம்!

கடல்களின் ஆதாரங்களை நமக்கு சாதமாக பயன்படுத்தும் அதேசமயம், கடல் வளத்தின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொறுப்பும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு நிச்சயம் உள்ளது. இந்நிலையில், கடல் துறை சார்ந்த படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, கடல் மற்றும் கடல் வாழ் உயரினங்கள் பற்றிய ‘மரைன் பயாலஜி’ பட்டப் படிப்பு மிகவும் அவசியமானது!

கடல் வாழ் உயிரினங்கள், அதன் செயல்பாடுகள் மற்றும் எவ்வாறு அவை கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றத் தொடர்பினை கொண்டுள்ளது, என்பதைப் பற்றி ஆராய்ந்து படிப்பது தான் ‘மரைன் பயாலஜி’.

இப்படிப்புடன் பயாலஜிகல் ஓசனோகிராபி, ஜியாலஜிகல் ஓசனோகிராபி, மாலிகுளர் பயலாஜி மற்றும் இரசாயனம், இயற்பியல் ஆகியவற்றை இணைந்தே வழங்கப்படுகிறது. மாலிகுளர் பயலாஜியின் உத்திகள் இடம்பெறுவதால், கடலோர சேற்று நிலப் பரப்பு, ஆழ்கடலில் இருக்கும் வைரஸ்கள், தாவரங்கள் மற்றும் மீன்கள் முதலியனவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்து அறிவதற்கான சிறந்த படிப்பு ‘மரைன் பயாலஜி’.

தகுதிகள்

இளநிலை பட்டப்படிப்பில் சேர, பள்ளி மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவை முதன்மைப் பாடமாக பயின்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டப்படிப்பில் சேர, இளநிலை பட்டப் படிப்பில் விலங்கியல், தாவரவியல், கடல் உயிரியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயாலஜி மற்றும் மீன்வளர்ப்பு போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் 60 சதவீத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கடல் சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் மற்றும் கடலியல் நிறுவனங்களில் மரைன் பயாலஜி படித்தவர்களுக்கு வேலைகள் அதிக அளவில் வழங்கப்படுகின்றன.

முக்கிய பல்கலைக்கழகங்கள்

புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சின்
கர்நாடக பல்கலைக்கழகம், கர்நாடகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விசாகப்பட்டிணம், ஆந்திரா
வீர் நர்மத் சவுத் பல்கலைக்கழகம், குஜராத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us