தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/அறிவீர்களா ‘மேட்’?

அறிவீர்களா ‘மேட்’?

அறிவீர்களா ‘மேட்’?


ஜன 14, 2016 12:00 AM

ஜன 14, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 14, 2016 12:00 AM ஜன 14, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உட்பட மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களின் திறன்களை பரிசோதிப்பதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வே ‘மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட்’ எனப்படும் ‘மேட்’. இந்தியாவில் சுமார் 600 பி-ஸ்கூல்களில் இத்தேர்வு மதிப்பெண் ஏற்றுக்கொள்ளப்படுகிறது! 

ஜிமேட், கேட், சிமேட், சேட் என பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மேலாண்மை படிப்பில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படுவதை பலரும் அறிந்திருப்பீர்கள்.

‘அகில இந்திய மேனேஜ்மெண்ட் அசோசியேஷன்‘ சார்பாக ஆண்டுக்கு நான்கு முறை- பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படுகிறது ‘மேட்’. இத்தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், ஏதேனும் ஒரு துறையில், இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு, இளநிலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு முறை
அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வு எழுத்து வழி தேர்வு (பேப்பர் பேஸ்ட் டெஸ்ட்) அல்லது கணினி வழி தேர்வு(கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட்) ஆகிய இரண்டு வழிகளில் நடத்தப்படுகிறது. மாணவர்கள், இவற்றில் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்து எழுதலாம்.

பாடங்கள்
லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்சன், மேத்மெட்டிக்கல் ஸ்கில், டேட்டா அனலைசஸ் அன்ட் டேட்டா சபீசியன்சி, இன்டலிஜென்ஸ் அன்ட் கிரிட்டிக்கல் ரீசனிங் மற்றும் இந்தியன் அன்ட் குளோபல் என்விரான்மென்ட் ஆகிய ஐந்து பிரிவுகளில் தலா 40 கேள்விகள் வீதம், மொத்தம் 200 கேள்விகள் ’அப்ஜெக்டிவ்’ முறையில் கேட்கப்படும்.

தேர்வு விபரங்கள்

தேர்வு மையங்கள்: நாட்டின் பல்வேறு பகுதிகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும். எனினும், சென்னை மையத்தில் மட்டுமே கணினி வழித் தேர்வு நடைபெறும் என்பதையும் நினைவில் கொள்க.

எழுத்து வழித் தேர்வு: பிப்ரவரி 7. தேர்வு நேரம்: காலை 10 முதல் 12.30 மணி வரை.

கணினி வழித் தேர்வு: பிப்ரவரி 13

விண்ணப்பிக்கும் முறை: www.apps.aima.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 23

மேலும் விவரங்களுக்கு: http://apps.aima.in/matfeb16/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us