/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
எம்.பி.ஏ படிப்பிற்கான சரியான நேரம் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள்
/
எம்.பி.ஏ படிப்பிற்கான சரியான நேரம் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள்
எம்.பி.ஏ படிப்பிற்கான சரியான நேரம் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள்
எம்.பி.ஏ படிப்பிற்கான சரியான நேரம் மற்றும் சட்ட பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள்
ஜன 16, 2014 12:00 AM
ஜன 16, 2014 12:00 AM
ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில், எம்.பி.ஏ., படிப்பில் சேர போட்டியை சந்திக்கும்போது, புதிதாக இளநிலைப் படிப்பை முடித்த பட்டதாரியை விட, சில வருடங்கள் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், பணி அனுபவம் பெற்ற ஒருவருக்கு, MBA வகுப்புகளில் கற்பிக்கப்படும் வணிக கருத்தாக்கங்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய கருத்தாக்கங்களை உங்களால் எளிதாக நடைமுறை பணிச் சூழலுடன் பொருத்திப் பார்த்து புரிந்துகொள்ள முடியும்.
பணி அனுபவம் பெற்ற ஒருவர், வகுப்பறை கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளும்போது, தனது கடந்தகால பணி அனுபவங்களிலிருந்து பல நல்ல பொருத்தமான உதாரணங்களை அவரால், மற்றவர்களுக்கு எடுத்துக்கூற முடியும் மற்றும் உள் அர்த்தங்களையும் புரிந்துகொள்ள முடியும்.
வேலை வாய்ப்பு என்று வரும்போது, பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தன்மையானது, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். சில நிறுவனங்கள் அனுபவமிக்கவர்களை விட, புதியவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏனெனில், புதிய புத்துணர்ச்சியான மூளையை, ஒரு நிறுவனம் தனது தேவைக்கும், சூழலுக்கும் ஏற்றபடி தகவமைத்துக் கொள்ள விரும்புவதே இதற்கு காரணம்.
ஆனால் சில நிறுவனங்கள், தொடர்புடைய பணி அனுபவம் உடையவர்களையே வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன. ஏனெனில், அப்போதுதான், அவர்களுக்கு புதிதாக பயிற்சியளிக்கும் செலவைக் குறைத்து, அவர்களிடமிருந்து தமக்கு தேவையான பயனை விரைவாக பெற்று, தேவையான கூடுதல் அறிவையும் எளிதாக வழங்க முடியும்.
குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் கொண்ட நபர்கள், MBA சேர்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றுதான். அதேசமயம், வெறுமனே பணி அனுபவம் என்பது இல்லாமல், நாம் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்கேற்ற அனுபவமே முக்கியமானது.
சட்டப் பட்டதாரிகளுக்கான பயன்
ஒரே மாதிரியான சம்பிரதாய கல்வியை வழங்கும் காலமெல்லாம் மலையேறி விட்டது. மாறாக, புகழ்வாய்ந்த மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஒருங்கிணைந்த அறிவை வழங்கும் மற்றும் மாணவரின் திறமைகளை அதிகரிக்கும் வகையிலான பாடத்திட்டங்களை கற்பிக்கின்றன.
உதாரணமாக, Harvard, Stanford, Yale, McGill போன்ற வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள், இதுதொடர்பான சிறப்பான அகப்பார்வையை வழங்குகின்றன. அவை, சட்டம் மற்றும் மேலாண்மை சார்ந்த, 5 ஆண்டு ஜே.டி., படிப்புகளை(J.D. programmes) வழங்குகின்றன. இதன்மூலம், இரண்டு துறை அறிவையும் பெற்று, மாறிவரும் வணிக சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளும் வாய்ப்புகளை மாணவர்கள் பெறுகிறார்கள்.
ஒரு வணிக மேலாளர், தனது தொழில் நடவடிக்கை தொடர்பாக போதுமான சட்ட அறிவு இல்லாமல், வெற்றி பெறுவது சிரமம். மேலும், அந்த நிலையில் அவரால் உறுதியான முடிவுகளையும் எடுக்க முடியாது.
தனது நடவடிக்கை தொடர்பாக, தேவையான சட்ட அறிவைப் பெற்றுள்ள ஒரு வணிக மேலாளர், ஒரு விஷயத்தை தெளிவாக கணித்து அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, தவறான முடிவுகளால் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
சட்ட மாணவர்களுக்கு, MBA படிப்பானது, பல்வேறான புதிய வேலை வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது மற்றும் மிகவும் விரும்பப்படும் வணிக மேலாளர்களாக அவர்களை மாற்றுகிறது. முக்கியமாக, நீதிமன்ற மேலாண்மை, கார்பரேட் நிர்வாகம் மற்றும் வணிக ஆலோசனை அமைப்புகள் ஆகிய பிரிவுகளில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.

