sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

படிப்பின்போது விடப்படும் இடைவெளி வருடத்தால் எம்.பி.ஏ., சேர்வதில் சிக்கலா?

/

படிப்பின்போது விடப்படும் இடைவெளி வருடத்தால் எம்.பி.ஏ., சேர்வதில் சிக்கலா?

படிப்பின்போது விடப்படும் இடைவெளி வருடத்தால் எம்.பி.ஏ., சேர்வதில் சிக்கலா?

படிப்பின்போது விடப்படும் இடைவெளி வருடத்தால் எம்.பி.ஏ., சேர்வதில் சிக்கலா?


மார் 04, 2014 12:00 AM

மார் 04, 2014 12:00 AM

Google News

மார் 04, 2014 12:00 AM மார் 04, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேர்முகத் தேர்வின்போது, ஏன் இடைவெளி எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்கு சரியான காரணம் தெரிவிக்கவில்லை என்றால், உங்களுக்கான வாய்ப்புகள் பறிபோகும். அதேசமயம், நேர்மறையான மனப்பாங்கும், தன்னம்பிக்கையும் இருந்தால், இடைவெளி வருடத்தால் உங்களுக்கு எந்தத் தடையும் நிகழாது.

உங்களை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். எதுவுமே, தொடக்கத்தில் கடினமாக தெரிந்தாலும், முடியாதது என்று எதுவுமில்லை. இடைவெளி வருடம் என்பது பொதுவாக சிக்கலான ஒன்றுதான்.

அதேசமயம், நீங்கள் அதை நன்றாகப் பயன்படுத்தியிருந்தால், சிக்கலை எளிதாக களையலாம். நீங்கள் கீழ்கண்ட பதிலை சொல்லும்போது, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும், நம்பும்படியாகவும் இருக்கும். அதாவது, "எனக்கு தயார் செய்துகொள்ள அதிககாலம் பிடித்தது" என்பதுதான்.

படிப்பின்போதே அல்லது பணியின்போது, எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுக்கு தயார்செய்வது சாத்தியமானதா? எனவே, இதற்காக ஒரு ஆண்டு இடைவெளி விட வேண்டியிருக்குமா?

இடைவெளி ஆண்டு என்பது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. CAT or XAT தேர்வில் தேர்ச்சிப் பெற்ற பெரும்பாலானோர், அத்தேர்வுகளுக்கு தங்களின் பணி அல்லது படிப்பின்போது தயாரானவர்களே. அவர்கள், தங்களுக்கான பணிகளை, வெற்றிகரமான முறையில் பேலன்ஸ் செய்ததையே இந்த வெற்றிகள் நிரூபிக்கின்றன.

பொதுவாக, இடைவெளி விடுவதென்பது ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது. எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வுகளின் பாடத்திட்டங்களை, உங்களின் பணி அல்லது படிப்பு ஆகிய அம்சங்களுடன் சேர்த்தே கையாள முடியும். ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை, நீங்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த விஷயங்களை ஒட்டியே இருக்கும். எனவே, நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்காது.

சரியான திட்டமிடுதல் மற்றும் நேர மேலாண்மை ஆகிய அம்சங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். ஏனெனில், இடைவெளி வருடம் இல்லாமல், பணி அனுபவத்தையும் கொண்டிருந்தால், அது உங்களுக்கு அனுகூலமானதாகவே இருக்கும்.

CAT அல்லது XAT ஆகிய தேர்வுகளுக்காக நீங்கள் ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு படிப்பதால் மட்டுமே, உங்களுக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும் என்பது அர்த்தமல்ல. அதனால், அதிகபட்ச மதிப்பெண்களோ அல்லது பகுதிவாரியாக பேலன்ஸ் செய்யப்பட்ட மதிப்பெண்களோ(balanced sectional scores) கிடைத்துவிடும் என்பதை நிச்சயிக்க முடியாது.

நேர்முகத் தேர்வில், எதற்காக இடைவெளி ஆண்டு எடுத்துக்கொண்டீர்கள் என்று உங்களை தாக்கப்போகும் கேள்விகளை சமாளிக்கும் வகையில் தயார்செய்து கொண்டு செல்வது நல்லது. பல சமயங்களில், நுழைவுத் தேர்வுக்கு படிப்பதற்காக இடைவெளி ஆண்டு எடுத்துக் கொள்பவர்களால், அவர்கள் எதிர்பார்த்த அளவில் சாதிக்க முடியாமல் போகிறது.

எனவே, எம்.பி.ஏ., படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக, தேவையில்லாமல் ஒரு ஆண்டை வீணாக்காமல், உங்களின் படிப்பின்போதோ அல்லது பணியின்போதோ, நேரத்தை சிறப்பான மேலாண்மை செய்து, விடாமுயற்சியுடனும், கடுமையாகவும் உழைத்து, நீங்கள் நினைத்ததை அடையவும்.






      Dinamalar
      Follow us