தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க செய்ய வேண்டியவை...

வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க செய்ய வேண்டியவை...

வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க செய்ய வேண்டியவை...


அக் 18, 2013 12:00 AM

அக் 18, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 18, 2013 12:00 AM அக் 18, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்டப் படிப்பை முடித்த பெரும்பாலான இந்திய மாணவர்களின் மிக முக்கியத் தேர்வான திகழ்வது எம்.பி.ஏ., படிப்பு. ஒரு நல்ல கல்லூரியில் எம்.பி.ஏ., படிக்கையில், நல்ல எதிர்கால வாய்ப்புகளையும், நடைமுறை ரீதியிலான கற்றல் மற்றும் பயிற்சிகள், நல்ல வகுப்பறை தோழர்கள், குளோபல் நெட்வொர்க், நல்ல அனுபவம் மற்றும் வலுவான அறிவுத்தளம் போன்ற பல்வேறான நன்மைகள் ஏற்படுகின்றன.

நீங்கள் மேற்கொள்ள நினைக்கும் வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பு, AMBA, AACSB, EQUIS ஆகிய அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யவும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முன்னதாக, சில முக்கிய அம்சங்களை கணக்கில் எடுக்க வேண்டும். அவை,

பணி அனுபவம்

இந்த வகை MBA படிப்புகள், குறைந்தது 2 அல்லது 3 வருட பணி அனுபவத்தைக் கோருகின்றன. அந்த அனுபவம் உடையவர்களே, இந்த வகை MBA படிப்புகளில் சேர முடியும். உங்களின் தேவையைப் பொறுத்து, ரெகுலர் MBA அல்லது Executive MBA அல்லது Specialized MBA ஆகியவற்றை தேர்வு செய்துகொள்ளலாம்.

ரெஸ்யூம்

உங்களின் அனைத்து வகை அனுபவங்கள், சாதனைகள் மற்றும் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் இந்த ரெஸ்யூம் என்ற ஆவணத்தில் தவறாமல், தெளிவாக குறிப்பிட வேண்டும். ரெஸ்யூம் சிறப்பான வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த ஆவணம், உங்களின் திறமை, நீங்கள் சிறந்த அறிவைப் பெற்றிருக்கும் துறைகள், கல்வி மற்றும் தொழில்துறைகளில் உங்களின் விருதுகள் மற்றும் இதர சாதனைகள் ஆகியவற்றை தெளிவாக தெரிவிப்பதாக இந்த ஆணவம் அமைய வேண்டும்.

பரிந்துரைக் கடிதம்

உங்களின் பேராசிரியர் அல்லது மேலதிகாரி ஆகியோரிடமிருந்து நீங்கள் பெறக்கூடிய நற்சான்று ஆவணம்தான் இந்த பரிந்துரைக் கடிதம். உங்களின் விண்ணப்பத்துடன் அதனை இணைப்பது மிகவும் அவசியம். இந்த அத்தாட்சி கடிதம் பெறப்படும் நபர், உங்களைப் பற்றி நன்கு அறிந்தவராகவும், உங்களின் எதிர்கால வாழ்வில் அக்கறைக் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

நோக்க அறிக்கை

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களில், நோக்க அறிக்கையும் ஒன்று. இதன்மூலம், உங்களைப் பற்றி தொழில்முறையிலும், தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.

நோக்க அறிக்கையை தெளிவான மற்றும் எளிமையான மொழி நடையிலேயே எழுதவும். தேவையற்ற சிக்கல் நடையை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களின் திறன் பற்றியும், சாதனைகள் பற்றியும் குறிப்பிடும்போது, முடிந்தளவு, அவற்றுக்கான உதாரணங்களைக் குறிப்பிடவும். உங்களின் நோக்க அறிக்கை, நீங்கள் ஏன் குறிப்பிட்ட படிப்புக்காக, அந்த குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகீறீர்கள் என்பதை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.

தேர்வு மதிப்பெண்கள்

முக்கிய நாடுகளின் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள்,

GMAT
GRE
IELTS
TOEFL

போன்ற தேர்வு மதிப்பெண்களை தகுதிகளாக ஏற்றுக்கொள்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us