sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பிளஸ் 1 முதல் பிஎச்.டி., வரை உதவித்தொகை வேண்டுமா?

/

பிளஸ் 1 முதல் பிஎச்.டி., வரை உதவித்தொகை வேண்டுமா?

பிளஸ் 1 முதல் பிஎச்.டி., வரை உதவித்தொகை வேண்டுமா?

பிளஸ் 1 முதல் பிஎச்.டி., வரை உதவித்தொகை வேண்டுமா?


செப் 18, 2015 12:00 AM

செப் 18, 2015 12:00 AM

Google News

செப் 18, 2015 12:00 AM செப் 18, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர் அறிவாற்றல் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தேசிய அளவிலான உதவித்தொகை திட்டம் தான், தேசிய திறன் அறியும் தேர்வு (National Talent Search Examination).

இந்தியாவின் பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் இத்தேர்வை, ‘நேஷனல் கவுன்சில் ஆப் எஜூகேசனல் ரிசர்ச் அன்ட் டிரைனிங்’ (என்.சி.ஆர்.டி.,) நடத்துகிறது.

உதவித்தொகை: தேசிய திறன் அறியும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலுகையில் மாதந்தோறும் ரூ.1250ம், இளநிலை மற்றும் முதுநிலை பயிலுகையில் மாதம் ரூ.2 ஆயிரமும் மற்றும் பிஎச்.டி.,-ன் போது பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளின்படியும் உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகை எண்ணிக்கை: 1,000

தேர்வு நிலைகள்: மாநில அளவிலான தேர்வு (நிலை-1) மற்றும் தேசிய அளவு தேர்வு (நிலை-2) என ஆண்டும் தோறும் இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. மாநில அரசால் நடத்தப்படும் நிலை-1ல் தகுதிபெறுபவர்களே என்.சி.ஆர்.டி., நடத்தும் நிலை -2ல் பங்கேற்க முடியும்.

தகுதிகள்: மாநில அளவிலான தேர்வு எழுத, தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தகுதியானவர்கள். எந்த ஒரு வேலையிலும் இருக்கக்கூடாது.  ஜூலை 1 நிலவரப்படி 18 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். திறந்தநிலை கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வை எழுதலாம்.

தேர்வு முறை: புத்திகூர்மை (50 மதிப்பெண்கள்), மொழிப் புலமை (50 மதிப்பெண்கள்), கல்வித் திறன் (100 மதிப்பெண்கள்) ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது.

நிலை-1 தேர்வில், பொதுவாக மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில், 9ம் மற்றும் 10ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து பொது கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும். சொல் வலமை, இலக்கணம் மற்றும் அடிப்படை புரிதில் பரிசோதிக்கப்படும்.

என்.சி.இ.ஆர்.டி., நடத்தும் தேசிய அளவிலான நிலை -2 தேர்வில், தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண்கள் உண்டு. அதன்படி, தவறான பதில்களுக்கு 1/3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். பதில் அளிக்காத கேள்விகளுக்கு எந்த கழிவும் இல்லை. ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 1 மதிப்பெண் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு: எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீதம்  இட ஒதுக்கீடு உண்டு.

தகுதி மதிப்பெண்: அனைத்துத் தேர்வு தாள்களிலும் பொதுப் பிரிவு மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://www.ncert.nic.in/index.html






      Dinamalar
      Follow us