sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஆன்-லைன் மூலம் அமெரிக்க எம்.பி.ஏ.,!

/

ஆன்-லைன் மூலம் அமெரிக்க எம்.பி.ஏ.,!

ஆன்-லைன் மூலம் அமெரிக்க எம்.பி.ஏ.,!

ஆன்-லைன் மூலம் அமெரிக்க எம்.பி.ஏ.,!


டிச 22, 2015 12:00 AM

டிச 22, 2015 12:00 AM

Google News

டிச 22, 2015 12:00 AM டிச 22, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமையலறையில் இருந்து கொண்டே கூட சர்வதேச படிப்பை படிக்க முடியும் என்ற நிலையை சாத்தியமாக்கியுள்ளது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி. இதனால் சமீப காலமாக, இணையதளத்தின் வாயிலாக சர்வதேச தரத்தில், குறிப்பாக மேலாண்மைக் கல்வியை கற்கும் ஆர்வம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது!

பல லட்சம் ரூபாய் செலவழித்து வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. மேலும், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அவ்வளவு எளிது இல்லை. இந்நிலையில், மேலாண்மை படிப்பிற்கு புகழ்பெற்ற அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை இன்றைக்கு சாத்தியமாக்குகிறது ஆன்-லைன் கல்வி முறை.

எதனால் ஆன்-லைன் கல்வி?

மாணவர்கள் முழு நேரமும் வகுப்பறையில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் கட்டுப்பாடும் இல்லை. குறைந்த செலவில், வேலை செய்து கொண்டே, தனக்கு ஏதுவான நேரத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருந்துகொண்டு இணையதளம் வாயிலாக எளிதில் பட்டப் படிப்பை படிக்க முடியும்.

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் முழு நேர எம்.பி.ஏ.,  பட்டப் படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளை ஒப்பிடுகையில், ஆன்-லைன்  பட்டப் படிப்பு சேர்க்கை மிகவும் எளிது. இணையதள இணைப்பும், ஆர்வமும்  இருந்தால் போதும் எம்.பி.ஏ., பட்டம் பெற்று விடலாம். 

ஆன்-லைன் மூலம் எம்.பி.ஏ., படிப்பை வழங்கும் சிறந்த அமெரிக்க கல்வி நிறுவனங்களின் பட்டியல் உங்களுக்காக...

புளோரிடா பல்கலைக்கழகம்
இந்தியானா யூனிவர்சிட்டி புளூமிங்டன்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்
பாப்சன் கல்லூரி
ட்ரெக்செல் பல்கலைக்கழகம்
அரிசோனா ஸ்டேட் பலகலைக்கழகம்
நார்த் கரோலினா சேப்பல் ஹில் பல்கலைக்கழகம்
பென் ஸ்டேட் பல்கலைக்கழகம்
நார்த் ஈஸ்டன் பல்கலைக்கழகம்
நார்த் கரோலினா ஸ்டேட் பல்கலைக்கழகம்






      Dinamalar
      Follow us