sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

ஒரு ஜர்னலிஸ்டுக்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்பு?

/

ஒரு ஜர்னலிஸ்டுக்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்பு?

ஒரு ஜர்னலிஸ்டுக்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்பு?

ஒரு ஜர்னலிஸ்டுக்கு எங்கெங்கெல்லாம் வாய்ப்பு?


நவ 27, 2014 12:00 AM

நவ 27, 2014 12:00 AM

Google News

நவ 27, 2014 12:00 AM நவ 27, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜர்னலிசம் என்பது பலரால் விரும்பப்படும் ஒரு துறையாக இருந்தாலும், பலரின் நினைப்பும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாகவே இருக்கிறது.

ஒருவர் ஜர்னலிஸ்டாக இருந்தால், அவர், தொலைக்காட்சி, செய்தித்தாள் அல்லது இன்னபிற பத்திரிக்கைகளில் வேலை பார்ப்பவர் மட்டுமே, அங்கு மட்டுமே, ஒரு ஜர்னலிஸ்ட் பணி வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற எண்ணம் நிலவுகிறது. ஆனால், உண்மை நிலவரம் வேறுமாதிரியானது. ஒரு ஜர்னலிஸ்டுக்கு பல்வேறான மாறுபட்ட பணி வாய்ப்புகள் உள்ளன.

ஜர்னலிஸ துறையில் பட்டம் பெறுவதின் மூலம், ஒருவரின் தகவல்தொடர்பு திறன் மற்றும் மல்டிமீடியா திறன்கள் செழுமையாவதோடு, அவருக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளும் திறக்கப்படுகின்றன. வழக்கமான மீடியா துறை வாய்ப்புகளை தாண்டிய வாய்ப்புகள் அவை.

வழக்கமான மீடியாத் துறை வாய்ப்புகள் தவிர்த்து, ஒரு ஜர்னலிஸ்ட் வேறு எந்த மாதிரியான வேலை வாய்ப்புகளையும் பெறலாம் என்பது குறித்த விபரங்களை இக்கட்டுரைக் கொண்டுள்ளது.

பேராசிரியர் பணி

ஆசிரியர் பணி என்பது ஜர்னலிச பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். யாருக்கு, காலையில் பணிக்கு சென்று, மாலையில் வழக்கமாக வீடு திரும்புவது எரிச்சலாக இருக்கிறதோ, அவர் தாராளமாக, ஆசிரியர் பணிக்கு செல்லலாம்.

ஆசிரியர் பணியில் நல்ல சம்பளமும், அனுபவமும், பணி திருப்தியும் கிடைக்கும். நீங்கள் பல பத்திரிக்கையாளர்களை உருவாக்கி விடலாம். துறை சார்ந்த ஆய்வில் ஈடுபடுவதற்கான நேரமும் உங்களுக்கு கிடைக்கும். வெறுமனே முதுநிலைப் படிப்பை முடித்த ஒருவருக்குக்கூட, கம்யூனிட்டி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

புத்தக எடிட்டர்

நல்ல இலக்கண அறிவு(grammatical knowledge), புத்தகங்களின் மீதான காதல் மற்றும் எழுதுவதில் ஆர்வம் ஆகிய அம்சங்கள் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு புத்தக எடிட்டிங் பணி பொருத்தமானது. நாட்டில், ஏராளமான புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன மற்றும் அவற்றிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவருகின்றன.

புத்தக எடிட்டர் என்ற முறையில், ஒரு புத்தகத்தை ஆழமாக, தேவைப்படின் திரும்ப திரும்ப படித்து, அதில் தேவையான திருத்தங்கள் மேற்கொண்டு, பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்து, அதை வெளியிடுவதற்கு ஏற்றவகையில் உருவாக்குவதே எடிட்டரின் பணி. இப்பணி சில நேரங்களில் நெருக்கடியும், அழுத்தமும் உடையதாக இருந்தாலும், பொதுவாக ஆவலைத் தூண்டக்கூடிய பணியாகும்.

பொதுமக்கள் தொடர்பு அலுவலர்

பொதுமக்கள் தொடர்பு பணிக்கு செல்வதற்கு, நல்ல தகவல்தொடர்பு திறன், தர்க்கரீதியான திறன் மற்றும் ஒருவரை பேச்சு மற்றும் தேவையான உதவிகளின் மூலம் திருப்திசெய்யும் சாமர்த்தியம் ஆகியவை இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்திற்கும், அதன் வாடிக்கையாளருக்கும் இருக்கும் உறவை, சீராக பேணுவதே இந்த அலுவரின் பிரதான பணி.

ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பை சிறப்பான முறையில் கட்டமைத்து அதை அதிகப்படுத்துவது பொதுமக்கள் தொடர்பு அலுவலரின் மீது ஏற்றப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு.

காப்பி ரைட்டர் பணி

உங்களிடம் படைப்புத்திறன் இருந்து, ரேடியோ மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களை மேம்படுத்தும் எண்ணம் இருந்தால், உங்களுக்கு காப்பி ரைட்டிங் துறை ஏற்றதாக இருக்கும்.

பிரின்ட் அல்லது எலக்ட்ரானிக் மீடியா ஆகிய எதுவானாலும், அது தொடர்பான விளம்பர content உருவாக்குதல், காப்பி ரைட்டரின் பொறுப்பாகும்.

போட்டோகிராபர்

புகைப்படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், யார் எடுத்த புகைப்படும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மற்றும் சிறப்பாக இருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியம். புகைப்படம் எடுப்பதென்பது ஒரு அற்புதமான கலை. கொஞ்சம் தொழில்முறையிலான கற்றல், நிறைய அனுபவம் மற்றும் பயிற்சி ஆகியவை, ஒருவரை சிறந்த போட்டோகிராபராக மாற்றும்.

வழக்கமாக பார்க்கும் காட்சியைவிட, வித்தியாசமானதொரு காட்சியை உங்களின் புகைப்படம் அளிக்க வேண்டும். ஒரு போட்டோகிராபர், ஏதேனும் மீடியாவில்தான் பணிபுரிய வேண்டுமென்பதில்லை. பல இடங்களில் freelancing பணிசெய்து, தனக்கென ஒரு சொந்த ஸ்டுடியோவையும் வைத்துக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us