sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

செபாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுபவர் மேற்கொள்ளும் பணிகள்

/

செபாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுபவர் மேற்கொள்ளும் பணிகள்

செபாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுபவர் மேற்கொள்ளும் பணிகள்

செபாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுபவர் மேற்கொள்ளும் பணிகள்


ஜூலை 26, 2014 12:00 AM

ஜூலை 26, 2014 12:00 AM

Google News

ஜூலை 26, 2014 12:00 AM ஜூலை 26, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செபாலஜி என்ற வார்த்தை கிரேக்க மூலத்திலிருந்து தோன்றிய வார்த்தையாகும். இந்த வார்த்தை 2 வார்த்தைகளின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

Psephos என்றால் பாறை அல்லது கல் என்ற அர்த்தத்தை குறிக்கும். Logy என்றால், துறை பற்றிய படிப்பைக் குறிக்கும். Psepho -களை, பேலட்டுகளாக கிரேக்கர்கள் பயன்படுத்தி வந்தமையால், தேர்தல்கள் மற்றும் வாக்களிப்பு சுபாவங்களைப் பற்றி படிக்கும் படிப்பு, Psephology என்று அழைக்கப்படுகிறது.

புள்ளியியலின் அடிப்படையில், அரசியல் தேர்தல்கள், அறிவியல் பூர்வ ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதன்மூலம், முந்தைய தேர்தல் தொடர்பாக, ஒரு psephologist, ஒரு பகுதியின் மக்கள்தொகை பரவல், ஜாதி அமைப்பு நிலவரங்கள், பணிபுரியும் குழுக்கள் மற்றும் இதர முக்கிய அம்சங்களைப் பற்றி, தனது கூர்மையான அரசியல் அறிவையும் வைத்து ஆராய முடியும்.

வாக்களிக்கும் போக்கு, அதில் ஏற்படும் மாறுதல்கள், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய பல அம்சங்களை பகுப்பாய்வு செய்வதில் psephologist -கள் ஈடுபடுகிறார்கள். மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில், ஒரு தேர்தலில் வெளிப்பட்ட மக்களின் மனநிலைப் பற்றி ஒரு செபாலஜிஸ்ட் விளக்குகிறார்.

இந்தியா போன்ற பல்வகை இனம், மொழி கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில், செபாலஜிஸ்டுகளின் தேவை மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், இங்கே நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் மற்றும் பல மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

செபாலஜிஸ்டுகளின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது மற்றும் இதுவொரு சீசன் சார்ந்த பணியல்ல. தேர்தல் நடைபெறும் காலங்களில் மட்டுமே செபாலஜிஸ்டுகள் தேவைப்படுவதில்லை. இவர்கள் எப்போதும் தேவைப்படும் நபர்களாகவே இருக்கிறார்கள்.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மீடியா குழுமத்தினால், அரசியல் அறிவியல் அல்லது சமூக அறிவியல் குறித்து கட்டுரைகள் அல்லது தலையங்கங்களை எழுதித் தருமாறு எல்லா காலங்களிலும் ஒரு செபாலஜிஸ்ட் அணுகப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

கல்வி நிறுவனங்கள்

இத்துறை சார்ந்த படிப்பை எங்கே மேற்கொள்வது என்ற கேள்வியும், குழப்பமும் மாணவர்களுக்கு ஏற்படும்.

அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் அதுதொடர்பான துறைகளில் எந்த பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்கி வருகிறதோ, அந்த கல்வி நிறுவனங்களில் இத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெறலாம்.






      Dinamalar
      Follow us