தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பப்ளிக் ஹெல்த் முதுநிலைப் படிப்பு - எதிர்காலம் எப்படி?

பப்ளிக் ஹெல்த் முதுநிலைப் படிப்பு - எதிர்காலம் எப்படி?

பப்ளிக் ஹெல்த் முதுநிலைப் படிப்பு - எதிர்காலம் எப்படி?


ஆக 16, 2013 12:00 AM

ஆக 16, 2013 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2013 12:00 AM ஆக 16, 2013 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மருத்துவம் படித்தவராக இருந்தாலும் சரி, படிக்காதவராக இருந்தாலும் சரி, சேவை மனப்பான்மை உள்ளவர்கள், தராளமாய் மேற்கொள்ளக்கூடிய படிப்பு முதுநிலை பொதுசுகாதார(பப்ளிக் ஹெல்த்) படிப்பு.

சில ஆண்டுகள் கிளினிக்கல் துறையில் பணிபுரிந்துவிட்டு, அதே துறையில், நிர்வாகம் மற்றும் மேலாண்மை பணிகளில் செல்ல விரும்புவோருக்கு, முதுநிலை பப்ளிக் ஹெல்த் படிப்பு துணை புரிகிறது. வெறும் கிளினிக்கல் பயிற்சிகளில் மட்டுமே திருப்தியடையாமல், நிர்வாக பணிகளிலும் ஆர்வம் உள்ள நபர்களுக்கு மேற்கூறிய படிப்பு ஒரு நல்ல வடிகால்.

சில கல்வி நிறுவனங்களில், இந்தப் படிப்பில் (Master's in Public Health - MPH), மருத்துவம் சாராத நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதுவொரு மேலாண்மை சார்ந்த படிப்பாகவும் இருப்பதால், பொதுத்துறையில் எப்படி சிறப்பாக பணிபுரிவது என்பதை கற்றுக்கொள்ள முடியும்.

வருமுன் காப்போம் கருத்தாக்கம்

ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை விட, மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எதுவுமில்லை. பப்ளிக் ஹெல்த் என்பது, கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுப்பது மற்றும் நோய்களைத் தடுப்பது ஆகிய நடைமுறைகளின் வழியாக ஒரு சமூகத்தின் சுகவாழ்வை உறுதிசெய்யும் ஒரு அறிவியலாகும்.

இப்படிப்பில், ஒரு மாணவர், சமூகத்தை எவ்வாறு அணுகி, அதன் சுகாதார அம்சங்களை ஆராய்ந்து, விஷயங்களை அறிந்துகொண்டு, சுகாதார சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பதைப் பற்றி கற்றுத்தரப்படும்.

பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம்

மருத்துவமனை மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகிய இரண்டு விஷயங்களிலிருந்தும், முதுநிலைப் பப்ளிக் ஹெல்த் படிப்பு என்பது வேறுபட்டதாகும். மெடிக்கல் சயின்சஸ் மற்றும் துணைநிலை மெடிக்கல் சயின்சஸ் படித்த மாணவர்களுக்கு, முதுநிலை மருத்துவமனை நிர்வாகப் படிப்பு ஏற்றது. மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரிய விரும்பும் நபர்கள் இப்படிப்புகளை மேற்கொள்கிறார்கள். மருத்துவமனை இயக்கம் தொடர்பானது இப்படிப்பு.

அதேசமயம், ஹாஸ்பிடல் மேலாண்மை படிப்பானது, நிதி, இயக்கம் மற்றும் பணியமர்த்தல் உள்ளிட்ட மருத்துவமனை மேலாண்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது ஒரு எம்.பி.ஏ., படிப்பை போன்றதே மற்றும் அனைத்து பிரிவு பட்டதாரிகளும் இதில் சேரலாம்.

MPH படிப்பின் அவசியம்

மருத்துவ சேவை அமைப்புகள், பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மருத்துவ செலவைக் குறைத்து, ஆரோக்கிய வாழ்வில் கவனம் செலுத்தப்படுகிறது.

இத்துறை நிபுணர்களின் தேவை இன்று மிகவும் அதிகளவில் உள்ளது மற்றும் இதனால் பப்ளிக் ஹெல்த் படிப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. Master's in Public health பட்டதாரிகள், பல்வேறு அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

பாடத்திட்டம்

இப்படிப்பின் முதல் வருடத்தில், மாணவர்கள், எம்.பி.ஏ., தொடர்புடைய அம்சங்களைப் படிக்கிறார்கள். ஆனால், இரண்டாமாண்டில், ஸ்பெஷலைசேஷன் நிலைக்கு வருகிறார்கள். மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளிலிருந்து வருபவர்களுக்கு கூடுதல் பலன்கள் உண்டு. ஏனெனில், இப்படிப்பு பப்ளிக் ஹெல்த் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்பானதாகும்.

பணி வாய்ப்புகள்

இப்படிப்பு, பலவிதமான பணி வாய்ப்புகளை வழங்குகிறது. அரசுத் துறைகள், அரசு சாரா துறைகள், என்.ஜி.ஓ.,க்கள், திட்டக் கமிஷன், சுகாதார மற்றும் குடிநீர் துறை, WHO, UNICEF, UNPA, UNDP, தனியார் மருத்துவமனைகள் மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள் ஆகிய பல்வேறு அமைப்புகளில், ப்ரோகிராம் ஒருங்கிணைப்பாளர், அனலிஸ்ட், கன்சல்டன்ட், ஆராய்ச்சியாளர்கள், முன்னறிவிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணிக்கு சேரலாம்.

படிப்பின் அம்சங்கள்

Evolution of public health
Epidemiology
Health economics
Prevention of disease/disabilities
Health education and awareness
Demography
Social and behavioural aspects of health
Health care delivery system and policies
Biostatistics
Environmental health and sanitation
National health programmes
Nutrition
Quality in healthcare
Research methodology
Health management
Promotion of health information system
Health insurance.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us