தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தாயகம் திரும்புங்கள்: ஜோஹோ ஸ்ரீதர்

தாயகம் திரும்புங்கள்: ஜோஹோ ஸ்ரீதர்

தாயகம் திரும்புங்கள்: ஜோஹோ ஸ்ரீதர்


ஏப் 29, 2026 09:48 AM

ஏப் 29, 2026 09:48 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 29, 2026 09:48 AM ஏப் 29, 2026 09:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவிலிருந்து, 37 ஆண்டுகளுக்கு முன், நான் அமெரிக்கா சென்றேன். அது போல பலரும் இந்தியாவில் கிடைத்த நல்ல கல்வி, கலாசாரப் பாரம்பரியத்துடன், அமெரிக்கா சென்றனர். மகத்தான வெற்றியை அடைந்தனர்.

அறநெறி போதனைகள்

அமெரிக்கா நமக்கு நல்லதையே செய்தது. அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்; நன்றியுணர்வே இந்தியாவின் வழி.

இப்போது, கணிசமான அமெரிக்கர்கள், தங்களின் வேலையை இந்தியர்கள் பறித்துக் கொள்கின்றனர். இந்தியர்களின் வெற்றி நியாயமற்ற முறையில் வந்தது என்றும் நம்புகின்றனர்.

அமெரிக்காவில் அடுத்து நடக்கும் தேர்தல், இதைச் சரிசெய்துவிடும் என்று இந்தியர்கள் நினைக்கலாம். இந்திய நாகரிகத்தை வெறுப்பவர்கள், நாகரிகத்தையே வெறுப்பவர்கள் என, இரண்டு தேர்வுகள் தான், இந்தியர்களிடம் உள்ளன.

'தீவிர வலதுசாரி' மற்றும் 'முற்போக்கு இடதுசாரி' இடையேயான போர் தான் அமெரிக்க தேர்தல். அதில் இந்தியர்கள் வெறும் பார்வையாளர்கள் தான். இந்தியா ஏழ்மை நாடாகவே நீடித்தால், முற்போக்கு இடதுசாரிகள், இந்தியர்களுக்கு பரிதாபத்துடன் அறநெறி போதனைகளை வழங்குவர்.

வலிமை பெறும்


தீவிர வலதுசாரிகள் நம்மை இகழ்ச்சியுடன் பார்ப்பர். இந்த இரண்டையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. தொழில்நுட்ப திறமை தான், ஒரு தேசத்தை வளமிக்க நாடாக்குகிறது.

அந்த திறமையை அடைவதற்கு தேவையான அறிவாற்றலை, இந்தியா உருவாக்குகிறது. ஆனால், வருந்தத்தக்க வகையில், அந்தத் திறமையில் பெரும்பகுதியை, வெளிநாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்துவிட்டோம். இந்தியர்கள் தம் தொழில்நுட்ப திறமையை இந்தியாவில் பயன்படுத்தினால், நம் நாடு வலிமை பெறும்.

எனவே, அமெரிக்க வாழ் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள், தயவு செய்து தாயகம் திரும்புங்கள். பாரத அன்னைக்கு உங்கள் தொழில்நுட்ப திறமை தேவை.

பெரும் எண்ணிக்கையிலான நம் இளைஞர் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த, பல ஆண்டுகளாக நீங்கள் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவம் தேவை. எனவே, தாயகம் திரும்புங்கள்.

- ஸ்ரீதர் வேம்பு, தலைமை விஞ்ஞானி, ஜோஹோ'




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us