தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ பொருளாதாரம் படிக்க உதவித்தொகை

பொருளாதாரம் படிக்க உதவித்தொகை

பொருளாதாரம் படிக்க உதவித்தொகை


ஏப் 02, 2024 12:00 AM

ஏப் 02, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 02, 2024 12:00 AM ஏப் 02, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாய்லாந்தில் உள்ள சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம், பிறநாட்டு மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பொருளாதார துறை படிப்பை வழங்குகிறது.

முக்கியத்துவம்
தாய்லாந்தின் முதல் உயர்கல்வி நிறுவனமான சுலாலோங்கோர்ன் பல்கலைகழகத்தில், தற்போது 24 ஆயிரத்து 963 மாணவர்கள் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளையும், 10 ஆயிரத்து 776 மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகளையும் படித்துவருகின்றனர். பொருளாதார துறையில் மட்டும் ஆயிரத்து 75 இளநிலை பட்டப்படிப்பையும், 198 மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்பையும் மேற்கொள்கின்றனர். பொருளாதார துறையில் 49 பிஎச்.டி., முடித்தவர்கள் உட்பட மொத்தம் 52 ஆசிரியர்க்ள் உள்ளனர்.
படிப்பு:
பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் புரொகிராம் இன் எக்னாமிக்ஸ் - இ.பி.ஏ.,
உதவித்தொகை எண்ணிக்கை:
5 சர்வதேச மாணவர்களுக்கு முழு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, ஐ.இ.எல்.டி.எஸ்., டோபல், எஸ்.ஏ.டி., ஏ.சி.டி., உட்பட ஏதேனும் ஒரு ஆங்கில மொழிப்புலமை தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணித பாடத்திற்கான புலமை தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
http://www.eba.econ.chula.ac.th/எனும் இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பத்த மாணவர்களில் தகுதிநிலை பரிசோதிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு மே 21 முதல் 24 வரை நடைபெறும். நேர்முகத்தேர்வில் பங்கேற்காதவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவர். முதல்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் மே 30ம் தேதி வெளியிடப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதி கடிதத்தை ஏற்று, உறுதிப்படுத்தலுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்பேரில் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 10
விபரங்களுக்கு:
www.education.gov.in/sites/upload_files/mhrd/files/eba.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us