/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்
/
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள்
ஜூன் 03, 2024 12:00 AM
ஜூன் 03, 2024 12:00 AM

மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ., போன்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் மட்டும் ஏன் ஏராளமான புதிய பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன?
அனைத்து துறைகளிலும் இன்று ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளன. அதேபோல், டேட்டா சயின்ஸ் சார்ந்த அறிவும் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய இணைய உலகில், சைபர் செக்யூரிட்டி பிரிவிலும் அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பிற இன்ஜினியரிங் துறைகளைவிட கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் மட்டும் அதிகமான உட்பாடப்பிரிவுகள் வழங்கப்படுதற்கு இத்தகைய வளர்ச்சியே காரணம்.
இனி வரும் காலங்களில் இன்ஜினியரிங் துறையில் வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
பெரும்பாலான இன்ஜினியரிங் துறைகள் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதால், இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் எந்த ஒன்றை தேர்ந்தெடுத்து படித்தாலும் அவற்றில் வாய்ப்புகள் உள்ளன.
இனி வரும் காலங்களிலும் மாணவர்களின் பிரதான தேர்வு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆக தான் இருக்குமா?
கடந்த பல ஆண்டுகளாக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்தனர். சில ஆண்டுகளாக, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற குறிப்பிட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற துறைகளையும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்கின்றனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்து துறை சேர்ந்த மாணவர்களும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பாடங்களை கூடுதலாக படிப்பதோடு, அவற்றில் அதிகமான புராஜெக்ட்களை மேற்கொள்கின்றனர். இன்ஜினியரிங் அல்லாத பிற துறை மாணவர்களும் ஏ.ஐ., போன்ற புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் இன்று ஆர்வம் செலுத்துவதை காண முடிகிறது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது.
தொழில் நிறுவனங்களின் பொதுவான எதிர்பார்ப்பு என்ன? எந்த திறன்களின் அடிப்படையில் வேலை வழங்குகின்றன?
மாணவர்கள் அவர்களது துறை சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, தொழில்நுட்பம், புரொகிராமிங், சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், தொடர்பியல் மற்றும் பிரசன்டேஷன் போன்ற திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய திறன்களை பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்பார்ப்பதோடு, இவற்றின் அடிப்படையிலேயே அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பையும் வழங்குகின்றன.
போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் மாணவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?
மாணவர்கள் தொடர்ந்து தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே நீடித்து நிலைத்திருக்க முடியும். திறன் வளர்ப்பில் தொடர்ந்து ஆர்வம் செலுத்த வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கம்ப்யூட்டர் புரொகிராமிங் பயன்படுத்தப்படுவதால், அனைத்து துறை மாணவர்களும் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது இன்று அவசியமாகிறது.
அதேதருணம், அனைத்து 'டொமைன்'களிலும் ஆழமான அறிவு கட்டாயமில்லை. ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், இதர முக்கிய துறைகளில் போதிய திறன்களையும் வளர்த்துக்கொண்டால் போதுமானது. எந்த துறை மாணவர்களாக இருந்தாலும், சுயமாக கற்றக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
-சுதா மோகன்ராம், முதல்வர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, கோவை.