/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ஒரு எம்.பி.ஏ., பட்டதாரிக்கு சமூகப் பணிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன?
/
ஒரு எம்.பி.ஏ., பட்டதாரிக்கு சமூகப் பணிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன?
ஒரு எம்.பி.ஏ., பட்டதாரிக்கு சமூகப் பணிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன?
ஒரு எம்.பி.ஏ., பட்டதாரிக்கு சமூகப் பணிகளில் கிடைக்கும் வாய்ப்புகள் என்ன?
பிப் 21, 2014 12:00 AM
பிப் 21, 2014 12:00 AM
சமூக களங்களில், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கென்று, இன்றைய நிலையில் வேலை வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. சமூக பணிகளின் மீது பல மாணவர்கள் சிறப்பான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பல சமூக தொழில் முனைவர்கள், பிரபல கல்லூரிகளின் வளாகங்களுக்கு வருகை தந்து, இதுதொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். அவர்கள் தங்களின் சமூக பங்களிப்பை எவ்வாறு தொடங்கினார்கள் மற்றும் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கேள்விகள் அமைகின்றன.
சமூகப் பங்களிப்பைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினரிடம் அதீத ஆர்வம் இருக்கிறது மற்றும் அவற்றில் தாங்களும் எவ்வாறு இணைந்து செயலாற்றலாம் என்பதைக் குறித்து அறிய ஆவலாக உள்ளனர். இதுதொடர்பாக மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும், உதவிகளும் அளிக்கப்படுகின்றன.
பல சமூக ஆர்வலர்களால், பல NGO -க்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளில் MBA பட்டதாரிகளின் தேவை கட்டாயம் இருக்கும். NGO -க்கள், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு, பல அம்சங்களில் ஒரு சிறந்த பயிற்சி களமாக இருக்கின்றன.
சமூக சேவை நடவடிக்கைகளில், மாணவர்கள் ஈடுபடும் வகையில் ஊக்கப்படுத்த, சமூகப் பணியில் அறிவுதிறன் மையமும் செயல்படுகிறது.
வேலை கிடைக்காத சமயங்களில் ஒரு எம்.பி.ஏ., பட்டதாரியாக உங்களின் வியூகம் எப்படி இருக்க வேண்டும்?
இன்றைய காலகட்டத்தில், பிரபல மேலாண்மை கல்வி நிறுவனங்கள்கூட தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு, பெரிய பணி வாய்ப்புகளுக்கான உத்தரவாதங்களை வழங்குவதில்லை. ஏனெனில், அத்தகையப் பணிகளுக்கான போட்டி அப்படி உள்ளது.
எனவே, ஒரு எம்.பி.ஏ., பட்டதாரி தனக்கான பணி வாய்ப்புகளை தேடிக்கொள்ள என்னென்ன வழிமுறைகளை முயற்சிக்கலாம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
MBA பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், ஆண்டுதோறும் GNA - IMT வேலை வாய்ப்பு கண்காட்சிகளை(job fairs) நடத்துகிறது. இந்த கண்காட்சியில், மார்க்கெடிங், பைனான்ஸ் மற்றும் மனிதவளம்(HR) ஆகிய பிரிவுகளில் தேவையான பட்டதாரிகளை பணியமர்த்துவதற்காக பல நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
மேலும், ஒரு மாணவர், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும் அலட்சியமாக நினைத்துவிடக்கூடாது. ஏனெனில், நீங்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளும் ஒரு நிறுவனமே, உங்களுக்கான முதல் பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக இருக்கலாம்.
அந்தப் பணி வாய்ப்பில் சம்பளம் குறைவாக இருந்தாலும், அது, பின்னாளில் உங்களுக்கு கிடைக்கும் பெரிய வாய்ப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும். Facebook, LinkedIn, Twitter போன்ற சமூக வலைதளங்களில் உங்களுக்கான வாய்ப்புகளைத் தேடும் அதே நேரத்தில், job portals மற்றும் blogs போன்றவையும் உங்களுக்கு சிறப்பாக துணைபுரியும்.

